ஊரடங்கினால் கரும்பு விற்பனையாகாமல் உ.பி. விவசாயி தற்கொலை: முதல்வர் யோகி அரசு மீது பிரியங்கா புகார்

By ஆர்.ஷபிமுன்னா

ஊரடங்கினால் விற்பனையாகாமல் கரும்பு விவசாயி உத்திரப்பிரதேசத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசே பொறுப்பு என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வத்ரா குற்றம் சுமத்தி உள்ளார்.

உ.பி.யின் மேற்குப்பகுதியில் உள்ள முசாபர்நகரில் அமைந்துள்ளது சிசோலி கிராமம். இங்கு கரும்பு பயிரிட்டுப் பிழைக்கும் விவசாயிகளில் ஒருவர் ஓம்பால் சிங்.

இவர் நேற்று இரவு தனது கரும்பு வயலில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தொங்கியுள்ளார். உயிர் பிரிந்த உடலை இறக்கிய அப்பகுதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

தன் துவக்கக் கட்ட விசாரணையில் ஓம்பால்சிங் தம் குடும்ப தகராறால் மனம் உடைந்து தற்கொலை செய்திருப்பதாகக் கூறியுள்ளனர். எனினும், இதை ஏற்காத அவரது குடும்பத்தினர் ஊரடங்கினால் கரும்பு விலை போகவில்லை என ஓம்பால் புலம்பி வந்ததாகத் தெரிவித்தனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள அரசு சர்கரை ஆலைகளும் வழக்கமாக பெறும் அளவிலான கரும்பு பயிரை ஊரடங்கில் பெறவில்லை எனவும் புகார் தெரிவித்தனர். இதற்கு ஆதரவாக அங்கு கூடிய மற்ற விவசாயிகள் நேற்று நாள் முழுவதிலும் சாலை மறியல் செய்து போராட்டம் நடத்தினர்.

இதில், பலியான விவசாயிடம் கரும்புகளை வாங்க மறுத்த அரசு சர்கரை ஆலை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். இதற்கு பாரதிய கிசான் யூனியன் மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியும் ஆதரவு அளித்திருந்தது.

இது குறித்து காங்கிரஸ் பொதுசெயலாளரான பிரியங்கா தனது ட்விட்டரில், ‘கரும்பு பயில் அதன் வயல்களிலேயே வீணாகி வருகிறது. இதனால், அதன் விவசாயி ஒருவர் முசாபர் நகரில் தற்கொலை செய்துள்ளார். 14 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு பயிருக்கான தொகை அளிப்பதாக பாஜக கூறுகிறது. ஆனால்,பல ஆயிரம் கோடி நிலுவைகளால் சர்கரை ஆலைகள் மூடப்பட்டு வருகின்றன.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஓம்பால் சிங்கின் உடலை பெற மறுத்து வந்த அவரது குடும்பத்தினரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், பாஜகவின் அப்பகுதி எம்.பியான சஞ்சீவ் பலியான் கலந்துகொண்டு பிரச்சனையை முடித்து வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்