பெண்கள் தாய்மை அடையும் வயது மற்றும் பேறுகால உயிரிழப்பைக் குறைப்பதற்கான நாடுதழுவிய செயல் திட்டத்தை உருவாக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தாய்மை அடையும் வயது மற்றும் பேறுகால உயிரிழப்பைக் குறைப்பதுடன், ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துதல் போன்றவை தொடர்பான விஷயங்கள் குறித்து பரிசீலிப்பதற்காக நடவடிக்கை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தகுழுவில் ஜெயா ஜெட்லி (புதுடெல்லி) தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
டாக்டர் வினோத் பால், உறுப்பினர் (சுகாதாரம்), நிதி ஆயோக் - உறுப்பினர் (Ex-officio)
செயலர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் - உறுப்பினர் (Ex-officio)
செயலர், மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம்- உறுப்பினர் (Ex-officio)
செயலர், பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை உறுப்பினர் (Ex-officio)
செயலர், உயர்கல்வித்துறை- உறுப்பினர் (Ex-officio)
செயலர், சட்டத்துறை - உறுப்பினர் (Ex-officio)
நஜ்மா அக்தர் (புதுடெல்லி) - உறுப்பினர்
வசுதா காமத் (மகாராஷ்ட்ரா)- உறுப்பினர்
தீப்தி ஷா (குஜராத்) - உறுப்பினர்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை குழு பெண்களுக்கான திருமண வயது, தாய்மை அடையும் வயது ஆகியவற்றுக்கும் கருவில் இருக்கும் குழந்தை, கைக்குழந்தை, குழந்தை ஆகியோரின் ஊட்டச்சத்து நிலைமைக்கும், கருவுற்றிருக்கும் பெண்கள் , குழந்தை பிறந்தவுடன், அதற்குப் பிறகு இருக்கும் பெண்களின் சுகாதாரம், உடல் நலம், ஊட்டச்சத்து நிலைமை ஆகியவற்றுக்கான தொடர்புகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளும்.
குழந்தைகள் இறப்பு விகிதம் , மகப்பேறின் போது இறக்கும் விகிதம், மொத்த கருவுறும் விகிதம், பாலினப் பிறப்பு விகிதம், குழந்தைகளின் பாலின விகிதம் போன்ற முக்கிய அம்சங்கள், இந்த அம்சங்கள் தொடர்பான சுகாதார ஊட்டச்சத்து சம்பந்தப்பட்ட தொடர்புள்ள வேறு விஷயங்கள் ஆகியவை குறித்து ஆய்வு செய்யும்.
பெண்களிடையே உயர்கல்வியை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை அளித்தல், பணிக் குழுவின் பரிந்துரைகளுக்கு ஆதரவாக தேவையான சட்டங்களை கொண்டுவருவதற்கான ஆலோசனைகள் / தற்போதைய சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருதல் ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை வழங்குதல் போன்றவற்றையும் செய்யும்
இக்குழு தனது அறிக்கையை 31 ஜூலை 2020க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago