நாடுமுழுவதும் 4,286 சிறப்பு ரயில்கள் மூலம் 58 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாகக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கடந்த ஒரு மாதமாக சொந்த மாநிலம் செல்ல முடியாமல் சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில்கள் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். பல தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலத்துக்கும் செல்கின்றனர்.
இதில் மகாராஷ்டிராவிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு நடந்தே ரயில் இருப்புப்பாதை வழியாகச் சென்றபோது உயிரிழந்த சம்பவமும் நடந்தது.
இதனால் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
நாடுமுழுவதும் 4,286 சிறப்பு ரயில்கள் மூலம் 58 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே வாரியத்தின் தலைவர் வினோத் யாதவ் கூறியதாவது:
நாடுமுழுவதும் 4,286 சிறப்பு ரயில்கள் மூலம் 58 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களின் தேவை குறைந்து வருகிறது. நாளொன்றுக்கு 250 ரயில்கள் தேவையாக இருந்த நிலையில் தற்போது 137 ரயில்கள் போதுமானதாக உள்ளன. கடந்த 2 தினங்களில் மட்டும் 56 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago