சந்தையில் காய்கறிகள் மீது ஜீப்பை ஏற்றி நாசம் செய்த சப்-இன்ஸ்பெக்டர் பதவி பறிப்பு: உ.பி. அரசு அதிரடி

By ஏஎன்ஐ

உத்தரப் பிரதேச மாநிலம் சூர்பூரில் நடைபெற்ற காய்கறிச் சந்தையில் கடைபோட்டிருந்தவர்களை மிரட்டி, ஜீப்பை காய்கறிகள் மீது ஏற்றி சேதம் செய்த சுமித் ஆனந்த் என்ற சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இவர் மீது எடுக்கப்பட்ட துறைசார்ந்த நடவடிக்கையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.

வியாழக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தில் புதன், வெள்ளிக்கிழமைகளில்தான் அங்கு சந்தை கூட அனுமதி என்றும் வியாழக்கிழமை கூடியதால் சப் இன்ஸ்பெக்டர் காய்கறி வியாபாரிகளைக் காலி செய்ய உத்தரவிட்டுள்ளார். ஆனால் அவர் உத்தரவுக்கு வியாபாரிகள் செவிமடுக்கவில்லை. இதனையடுத்து காய்கறிகள் மீது ஜீப்பை ஏற்றி தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் சப் இன்ஸ்பெக்டர் சுமித் ஆனந்த்.

இதனையடுத்து வியாபாரிகள் நஷ்டம் மதிப்பிடப்பட்டு அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படுகிறது.

உத்தரப்பிரதேச லாக் டவுன் உத்தரவுகளின் படி ஊரகப்பகுதிகளில் வாராந்திர சந்தைகளுக்கு அனுமதி, ஆனால் நகர்பகுதியில் வாராந்திர சந்தைக்கு அனுமதியில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்