மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ராஜீவ் கவுடா (காங்),பி.கே.ஹரி பிரசாத் (காங்), பிரபாகர் கோரெ (பாஜக), குபேந்திர ரெட்டி (மஜத) ஆகியோரின் பதவிக்காலம் வரும் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. காலியாகும் இந்த 4 இடங்களுக்கான தேர்தல்வரும் 19-ம் தேதி நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவையில் தற்போது பாஜகவுக்கு 117 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் அக்கட்சியை சேர்ந்த இருவரும், காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா ஒருவரும் மாநிலங்களவைக்கு தேர்வாகும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மல்லிகார்ஜுன கார்கேவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். டெல்லி அரசியலில் நீண்டஅனுபவம், சிறப்பான செயல்பாடுஆகியவற்றுக்காக அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மஜத சார்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, வேட்பாளராக நிறுத்தப்படலாம் என தெரிகிறது.
இந்நிலையில் பாஜக சார்பில் மறைந்த முன்னாள் மத்தியஅமைச்சர் அனந்த்குமாரின்மனைவி தேஜஸ்வினி மற்றும் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவியும், அந்நிறுவனஅறக்கட்டளையின் தலைவருமான சுதா மூர்த்தி ஆகியோரைவேட்பாளர்களாக களமிறக்கபாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago