கரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்கள் விகிதம் 48.27 சதவீதம்: மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

நாடுதழுவிய அளவில் கரோனா நோயாளிகளில் குணமடைந்தவர்களின் விகிதம் 48.27 சதவீதமாக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 5,355 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இதையும் சேர்த்து, இதுவரை, மொத்தம் 1,09,462 நோயாளிகள் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கொவிட் நோயாளிகளில் குணமடைந்தவர்களின் விகிதம் 48.27 சதவீதம். தற்போது 1,10,960 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

அரசு பரிசோதனைக் கூடங்களின் எண்ணிக்கை தற்போது 507 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தனியார் ஆய்வுக்கூடங்களும் 217 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.( மொத்தம் 727 பரிசோதனக்கூடங்கள்). 1,43, 661 மாதிரிகள் கடந்த 24 மணி நேரத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 43,86,379.

2020 ஜூன் 5-ஆம் தேதி வரை, கொவிட் தொடர்பான சுகாதாரக் கட்டமைப்பு, 957 கொவிட் தொற்றுக்கான மருத்துவமனைகளில், 1,66,460 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 21,473 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், 72,497 பிராண வாயு ஆதரவுடன் கூடிய படுக்கைகளுடன் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

1,32,593 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 10,903 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், 45,562 பிராணவாயு ஆதரவுடன் கூடிய படுக்கைகளுடன், கொவிட் தொற்று மருத்துவத்துக்கென 2,362 சுகாதார மையங்களும் இயங்கி வருகின்றன. 11,210 தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், 7,529 கொவிட் சுகாதார மையங்கள், 7,03,786 படுக்கைகளுடன், நாட்டில் கொவிட்-19 தொற்றை முறியடிக்க தற்போது தயார் நிலையில் உள்ளன.

இதுவரை, மத்திய அரசு, 128.48 லட்சம் என்-95 முகக்கவசங்கள், 104.74 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் ஆகியவற்றை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மத்திய நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்