கரோனா லாக்டவுன் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை அழைத்துவரும் மத்திய அரசின் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் கடந்த மே 7-ம் தேதி முதல் இதுவரை 1.07 லட்சம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை முதல்கட்ட வந்தே பாரத் திட்டம் முடிந்து 2-வது கட்டம் நடந்து வருகிறது. இந்த 2-வது கட்டம் வரும் 13-ம் தேதி வரை இருக்கும். இதற்கிடையே 3-வது கட்ட வந்தே பாரத் திட்டத்துக்காக மத்திய அரசு தீவிரமாகத் தயாராகி வருகிறது.
முதல்கட்ட வந்தே பாரத் மிஷன் திட்டம் மே 7-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இதில் 12 நாடுகளில் இருந்து 15 ஆயிரம் இந்தியர்கள் கப்பல், விமானம் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டார்கள். 2-வது கட்ட வந்தே பாரத் திட்டம் மே 17-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை சொல்லப்பட்டு பின்னர் ஜூன் 13-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்வஸ்தவா நிருபர்களுக்குப் பேட்டி அளித்தபோது கூறியதாவது:
» முகாம்களில் இருந்து சொந்த ஊர் திரும்பிய தமிழர்களிடம் நலம் விசாரிக்கும் டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்
''முதல்கட்ட வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் 15 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டார்கள். 2-வது கட்டத்தில் 337 விமானங்கள் மூலம் 38 ஆயிரம் பேர் வரை அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2-வது கட்ட வந்தே பாரத் திட்டத்தில் ஏர் இந்தியா நிறுவனம் 103 விமானங்களை இயக்குகிறது. ஒட்டுமொத்தமாக இதுவரை 454 விமானங்கள் பல்வேறு நாடுகளுக்கும் இயக்கப்பட்டு அதன் மூலம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 123 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இதில் 17 ஆயிரத்து 485 பேர் புலம்பெயர் தொழிலாளர்கள், 11 ஆயிரத்து 511 பேர் மாணவர்கள், 8 ஆயிரத்து 633 பேர் பெரிய நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள். நேபாளம், பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் நில எல்லைகள் வழியாக 32 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் வந்துள்ளனர்.
தாயகம் வருவதற்காக ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 48 ஆயிரத்து 565 இந்தியர்கள் இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்திருந்தார்கள். ஆனால், அரசின் விதிமுறைப்படி தவிர்க்க முடியாத காரணங்கள், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர், மாணவர்கள், வேலையிழந்து வெளியேற்றத்துக்காகக் காத்திருப்போர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளது.
3-வது கட்ட வந்தே பாரத் மிஷன் திட்டத்துக்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் அதிகமான இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுவார்கள்''.
இவ்வாறு ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago