ரயில் பயணத்தில் பாலுக்காக அழுத குழந்தை; மனித நேயத்துடன் செயல்பட்ட காவலர்: பியூஷ் கோயல் பாராட்டு

By செய்திப்பிரிவு

4 மாத குழந்தைக்கு பால் வாங்கி தருவதற்காக தீரத்துடன் செயல்பட்ட ரயில்வே காவலர் இந்தர் சிங் யாதவின் கடமையும், மனிதநேயத்தையும் பாராட்டி ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ரொக்க விருது அறித்துள்ளார்.

ஷெரீப் ஹாஷ்மி தனது கணவர் திரு ஹசீன் ஹாஷ்மி மற்றும் தனது 4 மாத குழந்தையுடன் பெல்காமில் இருந்து கோரக்பூர் செல்லும் ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் சென்று கொண்டிருந்தார். ரயிலில் அவரது குழந்தை பாலுக்காக அழுதது, ஆனால், முந்தைய எந்த நிலையத்திலும் குழந்தைக்குப் பால் கிடைக்காததால், போபால் நிலையத்தில் இருந்த ரயில்வே கான்ஸ்டபிள் யாதவிடம் உதவி கேட்டார்.

இந்தர் சிங் யாதவ் உடனடியாக விரைந்து போபால் நிலையத்திற்கு வெளியே உள்ள ஒரு கடையில் இருந்து ஒரு பாக்கெட் பால் கொண்டு வந்தார், ஆனால் ரயில் நகரத் தொடங்கியது.

கான்ஸ்டபிள், ஓடும் ரயிலின் பின்னால் ஓடி, ரயில் பெட்டியில் இருந்த பெண்மணியிடம் பால் பாக்கெட்டை வழங்கி தனது மனிதநேயத்தையும் தைரியத்தையும் வெளிப்படுத்தினார்.


ரயில்வே பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் இந்தர் சிங் யாதவின் பாராட்டத்தக்க செயலுக்கு நாடுமுழுவதும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து அவரை ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் பாராட்டினார் அவரை கௌரவிப்பதற்காக ரொக்க விருதை அறிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்