தப்லீக் ஜமாத்; 960 வெளிநாட்டினருக்கு 10 ஆண்டுகளுக்கு தடை?

By செய்திப்பிரிவு

வெளிநாடுகளில் இருந்து தப்லீக் ஜமாத் பணிகளுக்காக வந்த 960 வெளிநாட்டினரும் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வருவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத்தில் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர்.

மார்ச் முதல் வாரத்தில் நடத்தப்பட்ட தப்லீக் ஜமாத் மாநாட்டில் நாடு முழுவதிலிருந்தும் 9 ஆயிரம் பேர் பங்கேற்று தங்கள் மாநிலங்களுக்குச் சென்றதாகத் தகவல் வெளியானது. இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

அவரின் உத்தரவின் பேரில் கடந்த மார்ச் 31-ம் தேதி நிஜாமுதீன் பகுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவர் மவுலா சாத் கந்தால்வி மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளது.

தை அடிப்படையாக வைத்து அமலாக்கப்பிரிவு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குப்பதிவு செய்துள்ளது. தப்லீக் ஜமாத் நிர்வாகிகள் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும், நன்கொடைகள் பெற்றதாகவும் புகார்கள் தொடர்பாக நன்கொடைகளை அன்னிய பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் வழக்கப்பதிவு செய்து விசாரணையை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் வெளிநாடுகளில் இருந்து தப்லீக் ஜமாத் பணிகளுக்காக வந்த 960 வெளிநாட்டினரும் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வருவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்