ஊரடங்கில் பள்ளிக்கு மாணவர்களை வரவழைத்து வகுப்பு:  பள்ளி முதல்வர் மீது வழக்கு 

By ஏஎன்ஐ

கரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது, சமூகப்பரவல் கட்டத்தை எட்டி விட்டோமோ என்ற ஐயம் எழும் நேரத்தில் அரசு அனைத்து விதமான தளர்வுகளையும் மேற்கொண்டு முன்னெச்சரிக்கைகளைத் தவிர்த்து வருவது ஒருபுறம் என்றாலும் பள்ளிகளுக்கு இன்னும் அனுமதியளிக்கப்படவில்லை.

இந்நிலையில் பஞ்சாப் லூதியானாவில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்புகள் நடத்தியதற்காக பிரின்ஸிபால் ஒருவர் மீது லூதியானா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் மீது எஃப்.ஐ.ஆர். பதியப்பட்டுள்ளது.

லூதியானாவின் ஹைபோவால் பகுதியில் உள்ள பள்ளியாகும் இது.

புதிய தளர்வுகள் அன்லாக்-1 என்று அழைக்கப்பட்டு படிப்படியாகவே அமலாகவுள்ளது. இதில் பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.

மாநில அரசுகள், யூனியன்பிரதேசங்கள் இதுதொடர்பாக பள்ளிகள், பெற்றோர் ஆகியோருடன் கலந்தாலோசித்த பிறகே முடிவெடுக்கப்படும், எப்படியும் 10ம் வகுப்புத் தேர்வுகள் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை பள்ளிகளைத் திறப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.

இந்நிலையில் ரிஸ்க் எடுக்கும் விதமாக மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து வகுப்புகள் நடத்திய பிரின்ஸிபால் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

1 day ago

மேலும்