கேரள மாநிலம், மலப்புரம் வனச்சரகத்தில் கர்ப்பிணி யானையை அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து கொன்ற சம்பவத்தில் வயநாடு தொகுதி எம்.பி.யும் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்
கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில்தான் வனவிலங்கு வேட்டையாடுதல் நடக்கிறது இதுவரையாரும் தண்டிக்கப்படவில்லை, 600 யானைகள் கொல்லப்பட்டுள்ளதில் என்ன நடவடிக்கை எடுத்தது கேரள அரசு என்று மேனகா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்
பாலக்காடு மாவட்டம், மண்ணார்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுற்றித்திருந்த கர்ப்பிணி பெண் யானைக்கு வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட அன்னாசிப்பழக்கை யாரோ வழங்கியுள்ளனர். அந்த அன்னாசிப்பழத்தை மென்று தின்றபோது அது வெடித்ததில் யானை தாடைப்பகுதி பற்கள் உடைந்து சேதநடைந்தன.
இந்த சம்பவத்தையடுத்து உணவு சாப்பிடமுடியாமல் வலியுடனும் வேதனையுடனும் சுற்றுத்திரிந்த பெண் யானை வெள்ளியாறு ஆற்றில் நின்றநிலையில் கடந்த 27-ம் தேதி உயிரிழந்தது.
அந்த பெண் யானையை வனத்துறையினர் உடற்கூறு ஆய்வு செய்தபோது அந்த யானை ஒரு மாதம் கர்்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து யானையைக் கொன்ற சம்பவத்துக்கு பல்வேறு பிரபலங்கள் தரப்பிலும் மக்கள் மத்தியிலும் கடும் கண்டனம் வலுத்து வருகிறது. இந்த தவறைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி்க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிப்படைைய கேரள முதல்வர் பினராயிவிஜயன் அமைக்க உத்தரவிட்டுள்ளார், மேலும், இந்த கொடூர சம்பவம் குறித்து முழுமையான அறிக்ைகயையும் கேரள அரசிடம் இருந்து மத்திய அரசு கோரியுள்ளது.
இந்நிலையில் வனவிலங்கு ஆர்வலரும், பாஜக மூத்த தலைவருமான மேனகா காந்தி நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் “ யானைக்கு அன்னாசிப்பழத்தில் வெடிவைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் வயநாடு எம்.பி. ராகுல் காந்தி என்ன நடவடிக்கை எடுத்தார்.
மலப்புரம் வயநாடு தொகுதிக்குள்தானே வருகிறது. மலப்புரம் மாவட்டத்தில் வினவிலங்கு வேட்டையாடுபவர்கள் அதிகரி்த்து வரும் நிலையில் அதைத் தீர்க்க ராகுல் காந்தி என்ன நடவடிக்கை எடுத்தார். வெறும் பேச்சில் மட்டும் ஆர்வம் காட்டாமல் ராகுல் காந்தி இதுபோன்ற பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டும்
இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று கேரள வனத்துறைச் செயலாளரை நீக்க வேண்டும், அமைச்சரையும் நீக்க வேண்டும். யானைகள் இதுபோல் கொல்லப்படுவது குறித்து 6ஆயிரம் பக்கத்தில் எங்கள் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறோம்.
அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. இதுவரை 11ஆயிரம் யானைகள் கொல்லப்பட்டுள்ளன, உச்ச நீதிமன்றத்தில்எங்கள் வழக்கு முடியும் முன் இன்னும் எத்தனை யானைகள் கொல்லப்பட போகின்றனவோ தெரியவில்லை” எனத் தெரிவித்தார்
இதற்கிடையே மேனகா காந்தி கேரள அரசு உயரதிகாரிகளுக்கு கடிதம் எழுதி அதை தனதுட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அதில் “ கேரள வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சகம் இதுவரையானைகள் கொல்லப்பட்டதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேரளாவில் உள்ள கோயி்கள்களிலும், தனியார் தரப்பிலும் யானைகளின் காலைகளை உடைத்தும், நகங்களைப் பிடுங்கியும், பட்டிணிபோட்டும் இதுவரை 600யானைகள் கொல்லப்பட்டுள்ளன.
சமீபத்தில் திருச்சூர் மாவட்டம் இரிஞ்சலகுடாவி்்ல் உள்ள கூடல்மணியகம் கோயிலில் ஒரு யானை கட்டிப்போடப்பட்டு அடித்து துன்புறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு இதுவரை நடவடிக்கை இல்லை .கேரள மாநிலத்திலேயே மலப்புரம் மாவட்டத்தில்தான் வனவிலங்குகளுக்கு எதிராக அதிகமான கொடுஞ்செயல்கள் நடக்கின்றன. ஆனால் இதுவரை யார்மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago