மத்திய விற்பனை வரி குறைவால் உத்தர பிரதேச மாநிலத்துக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புக்கு ஈடு செய்யும்படி உ.பி.முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய அரசு மத்திய விற்பனை வரியை 1.4.2007 அன்று 4 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகவும், ஜூன் 2008-ல் 3 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகவும் குறைத்தது.
இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு ஈடு செய்யப்படும் என்று மத்திய அரசு 22.8.2008 அன்று உறுதி அளித்தது. இந்த வகையில் உ.பி.அரசு 2007-08 முதல் 2012-13 வரை ஏற்பட்ட வருவாய் இழப்பான ரூ.2711.62 கோடிக்கு கோரிக்கை அனுப்பியுள்ளது,
இந்த தொகையை வளர்ச்சித்திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டி, உடனடியாக மாநில அரசுக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago