திருமண ஆசை காட்டி ஆண்களிடம் மோசடி: ரூ.1 கோடி பறித்த வழக்கில் பெண் மீண்டும் கைது

By என்.மகேஷ்குமார்

ஹைதராபாத்தை சேர்ந்தவர் மாளவிகா தேவதி (44). இவரதுகணவர் கோபால் தேவதி (50). இவர்களின் மகன் வெங்கடேஸ்வர பிரணவ் லலித் (22). இவர்கள், மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க முடிவு செய்தனர்.

இதற்காக திருமண இணையதளம் ஒன்றில் பல்வேறு புனைப்பெயர்களில் போலியான பக்கத்தை மாளவிகா உருவாக்கி,வெளிநாடுவாழ் இந்தியர்கள் முதல் பலரை ஏமாற்றத் தொடங்கினார். இதுதொடர்பான புகாரின்பேரில் ஹைதராபாத் போலீஸார்்இவரை கைது செய்துள்ளனர்.

எனினும் ஜாமீனில் வரும் இவர்கள் அடிக்கடி வீடுகளை மாற்றிக்கொண்டு மோசடிகளை தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் திருமண ஆசை காட்டி ரூ.45 லட்சம் வரை மோசடி செய்ததாக வருண் என்ற அமெரிக்கவாழ் இந்தியர் அளித்த புகாரின் பேரில் மாளவிகா மற்றும் அவரது மகன் பிரணவ் லலித்தை ஹைதராபாத் போலீஸார் கடந்த 27-ம் தேதி கைது செய்தனர். மாளவிகாவின் கணவர் கோபால் தலைமறைவாகி விட்டார்.

இந்நிலையில், மாளவிகா தேவதி மீது நேற்று முன்தினம்மேலும் ஒருவர் புகார் அளித்தார்.மாளவிகா தனக்கு பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வீடு உள்ளதாகவும் இதன் மீது நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும், பணஉதவி செய்தால் பல கோடிமதிப்புள்ள சொத்து தனக்கு வந்துவிடும் அதன்பிறகு திருமணம்தான் என 33 வயது பொறியாளர் ஒருவரை மயக்கியுள்ளார். இதை நம்பிய அவர் மாளவிகா வங்கிக் கணக்கில் ரூ.1.02 கோடி வரை செலுத்தியுள்ளார். பிறகு ஏமாற்றம் அடைந்த அவர் போலீஸாரிடம் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக மாளவிகா மற்றும் பிரணவ் லலித்தை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்