தென்மேற்கு பருவமழை நீண்டகால அடிப்படையில் 107 சதவீதமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு

By செய்திப்பிரிவு

தென்மேற்கு பருவமழை நீண்டகால அடிப்படையில் 107 சதவீதம் என்ற அடிப்படையில் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை வழக்கமாக ஜூன் 1-ம் தேதி கேரளாவில் தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதமாகத் தொடங்கும் என இந்திய வானிலை மையம் கடந்த 15-ம் தேதி அறிவித்தது.

பின்னர் வங்கக்கடலில் உருவான உம்பன் புயலாலும் அரபிக்கடலில் தற்போது உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாலும் தென்மேற்குப் பருவமழை வழக்கமான நாளான ஜூன் 1-ம் தேதி தொடங்கும் எனக் கடந்த வாரம் அறிவித்திருந்தது.

தென்மேற்குப் பருவமழை வாயிலாகத்தான் நாட்டிற்குத் தேவைப்படும் 75 சதவீத வருடாந்திர மழை ஜூன் முதல் செப்டம்பர் வரை கிடைக்கிறது. கேரளாவில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை ஜூலை 15-ம் தேதிக்குள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெய்யத் தொடங்கும். தென்மேற்குப் பருவமழை சீராக இருப்பதே இந்தியா முழுவதும் விவசாயம் செழிக்க ஆதாரமாக இருக்கிறது.

இந்த சூழலில் கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியற்தான அனைத்துக் காரணிகளும் சரியாகப் பொருந்தியதால் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை மையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்தநிலையில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் ஆனந்த் சர்மா கூறியதாவது:

‘‘தென்மேற்கு பருவமழை நீண்டகால அடிப்படையில் 107 சதவீதம் என்ற அடிப்படையில் இருக்கும். மத்திய இந்தியா 103 சதவீத அளவிலும், தென்னிந்தியா 102 சதவீத அடிப்படையிலும், வடகிழக்கு இந்தியா 96 சதவீத அடிப்படையிலும் மழையளவு பெறும்’’ எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்