மூடிஸ் ரேட்டிங் குறைப்பு: இந்தியப் பொருளாதாரத்தை மோடி கையாளும் விதம் குப்பை மீது அடியெடுத்து வைப்பதாக உள்ளது: ராகுல் காந்தி கவலை

By பிடிஐ

இந்தியப் பொருளாதாரத்தை பிரதமர் மோடி கையாளும் விதம் குப்பை மீது அடியெடுத்து வைத்துள்ளதை மூடிஸ் ரேட்டிங் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

சர்வதேச கடன்தர நிர்ணய ஆய்வு நிறுவனமான மூடிஸ் கடந்த 20 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவின் தரமதிப்பை நேற்றுக் குறைத்தது. கடந்த 1998-ம் ஆண்டிலிருந்து இந்தியாவின் தரமதிப்பு என்பது பிஏஏஏ2 என்ற நிலையிலிருந்து பிஏஏ3 என்ற அளவுக்கு சரிந்தது.

கடந்த 2018-ம்ஆண்டு நவம்பர் மாதம்தான் பிஏஏ2என்ற நிலைக்கு இந்தியா உயர்ந்தது. ஆனால், குறைந்த பொருளாதார வளர்ச்சியால் வரும் இடர்பாடு, நிதிப்பற்றாக்குறை, நிதித்துறை அழுத்தம் போன்றவை ஆளும அரசுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. மேலும், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4 சதவீதமாகக் குறையும் என மூடிஸ் நேற்று தனது மதிப்பீ்ட்டில் தெரிவித்திருந்தது.

இதில் பிஏஏ3 ரேட்டிங் இப்போது இந்தியாவுக்கு வழங்கப்பட்டு இருப்பது முதலீடு செய்வதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் கடைசி ரகமாகும். அதாவது முதலீடு செய்வதற்கு உகந்த நாடுகளில் இல்லாத பட்டியலுக்கு முந்தைய இடத்தில் இருக்கிறது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்வி்ட்டில் கருத்துப் பதிவிட்டுள்ளார், அதில் “ பிரதமர் மோடி இந்திய பொருளாதாரத்தை கையாண்டு குப்பை மீது அடியெடுத்து வைத்துள்ளதாக மூடிஸ் ேரட்டிங் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

ஏழைகளுக்கும், சிறுநடுத்தர நிறுவனங்களுக்கு மத்திய அரசு போதுமானஅளவு ஆதரவு கரம் நீட்டாமல் இருப்பது, நிதியுதவி அளிக்காமல்இருப்பது இன்னும் மோசமான காலம் வராததை காட்டுகிறது என அர்த்தம்” எனத் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்