2-ம் ஆண்டில் பாஜக அரசு; அடுத்த இலக்கு என்ன?- பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

By செய்திப்பிரிவு

மத்திய அரசு 2-ம் ஆண்டு அடியெடுத்து வைத்துள்ள நிலையில் அடுத்தகட்ட இலக்கு குறித்து விவாதிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் இரண்டாம் முறையாக கடந்த ஆண்டு மே 30-ம் தேதி பதவியேற்றது. இந்த அரசு தற்போது ஓராண்டை நிறைவு செய்தது.

குடியுரிமை திருத்த சட்டம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு நீக்கம், அயோத்தி விவகாரம், தீவிரவாத எதிர்ப்பு சட்டங்களை வலுப்படுத்தியது, வங்கிகள் இணைப்பு போன்ற நடவடிக்கைகள் இந்த ஓராண்டு காலத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் பிறகு முதன்முறையாக பிரதமர் மோடி தலைமையிலான முழு அளவிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவும் இனி சுயசார்பு பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்துள்ளார்.

அதாவது அந்நிய முதலீட்டையும் அந்நிய பொருட்களையும் நம்பிஇராமல் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கும் முயற்சியில் இறங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதற்கான அறிவிப்புகளையும், திட்டங்களையும் மத்திய அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

கரோனா பாதிப்பு, ஊரடங்கு சூழலால் பொருளாதார பாதிப்பு என இந்திய பல நெருக்கடிகைளை எதிர்கொண்டு வரும் நிலையில் தற்சார்பு பொருளாதார சூழலை செயல்படுத்துவது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்