இடி மின்னலுடன் பலத்த மழையால் தாஜ்மகால் வளாகத்தில் சேதம்

By செய்திப்பிரிவு

உத்தரபிரதேசத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததாலும் சூறைக்காற்று வீசியதாலும் தாஜ்மகால் வளாகத்தில் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் உள்ளது. ஆக்ராவில் கடந்த வெள்ளிக்கிழமை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கடும் சூறைக்காற்றும் வீசியது. இதில் தாஜ்மகால் வளாகத்தில் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது. நுழைவாயில் கதவு மற்றும் பிரதான கல்லறையை ஒட்டியுள்ள சிவப்பு பளிங்கு கல்லால் ஆன தடுப்புச் சுவரின் ஒரு பகுதி, சுற்றுலா பயணிகள் நிற்கும் பகுதியில் உள்ள மேற்கூரை ஆகியவை சேதமடைந்துள்ளன. எனினும், பிரதான கட்டிடத்துக்கு எந்த சேதமும் இல்லை என்று தொல்லியல் ஆய்வுத்துறை கண்காணிப்பாளர் வசந்த் குமார் ஸ்வர்ன்கார் தெரிவித்துள்ளார். சேதமடைந்த பகுதிகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, உத்தரபிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த இடியுடன் கூடிய பலத்த மழைக்கு இரண்டு மாவட்டங்களில் 13 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

50 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்