கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் 8 ஆயிரத்து 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் 8,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு அளவு ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 143 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 86 ஆயிரத்து 983 பேர் குணமடைந்துள்ளனர், 89 ஆயிரத்து 995 பேர் சிகிச்சையில் உள்ளனர். குணமடைந்துவருவோர் சதவீதம் 47 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 193 பேர் உயிரிழந்ததையடுத்து, பலியானோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்து 5,164 ஆக அதிகரித்துள்ளது. இதில் மகாராஷ்டிரவில் நேற்று 99 பேர் உயிரிழந்துள்ளனர், குஜராத்தில் 27 ேபர், டெல்லியில் 18 பேர், மத்தியப்பிரதேசம்,ராஜஸ்தானில் தலா 9 பேர், மேற்கு வங்கத்தில் 7 பேர், தமிழகம், தெலங்கானாவில் தலா 6 ேபர், பிஹாரில் 5 பேர், உத்தரப்பிரதேசத்தில் 3 பேர், பஞ்சாப்பில் இருவர், ஹரியாணா, கேரளாவில் தலா ஒருவர் உயிரிழந்தனர்
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 2,197 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 1,007 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 343 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 309 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் உயிரிழப்பு 416 ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 193 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பலி எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 77 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 201ஆகவும், ஆந்திராவில் 60ஆகவும் இருக்கிறது.
கர்நாடகாவில் 48 பேரும், பஞ்சாப்பில் 44 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 28 பேரும், ஹரியாணாவில் 20 பேரும், பிஹாரில் 20 பேரும், ஒடிசாவில் 7 பேரும், கேரளாவில் 9 பேரும், இமாச்சலப்பிரதேசம், ஜார்கண்ட், உத்தரகாண்டில் தலா 5 பேர், அசாமில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 65,168 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 28,081 ஆக உயர்ந்துள்ளது.
அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 184ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 12,000 ஆகவும் அதிகரித்துள்ளது.
3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 18,549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,075 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 16,343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,230 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 8,617 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 7,891 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 7,445 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 5,130 பேரும், ஆந்திராவில் 3,569 பேரும், பஞ்சாப்பில் 2,233 பேரும், தெலங்கானாவில் 2,499 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 2,341 பேர், கர்நாடகாவில் 2,922 பேர், ஹரியாணாவில் 1,923 பேர், பிஹாரில் 3,636 பேர், கேரளாவில் 1,208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 575 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 1,819 பேர், சண்டிகரில் 289 பேர் , ஜார்க்கண்டில் 563 பேர், திரிபுராவில் 268 பேர், அசாமில் 1,185 பேர், உத்தரகாண்டில் 749 பேர், சத்தீஸ்கரில் 447 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 313 பேர், லடாக்கில் 74 பேர், மேகாலயாவில் 27 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 14 பேர் குணமடைந்தனர். மணிப்பூரில் 62 பேர், கோவாவில் 70 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிக்கிம், அருணாச்சலப் பிரதேசமில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகள், மிசோரத்தில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago