27 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உ.பி. திரும்பினர்

By செய்திப்பிரிவு

27 லட்சத்திற்கும் அதிகமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்திற்கு திரும்பியுள்ளதாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அவினாஷ் அவஸ்தி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வேலையிழந்து, கொடும் வறுமைக்கு ஆளான புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாகவும், சைக்கிளிலும் சொந்த ஊருக்குச் சென்று வருகின்றனர்.

அவர்களைச் சொந்த மாநிலங்களில் கொண்டு சேர்ப்பதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் இயக்கி வருகிறது. இதனையடுத்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

இந்தநிலையில் வெளி மாநிலங்களில் பணிபுரிந்து வந்த உ.பி.யைச் சேர்ந்த 27 லட்சத்திற்கும் அதிகமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து உ.பி. மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அவினாஷ் அவஸ்தி தெரிவித்துள்ளதாவது:

27 லட்சத்திற்கும் அதிகமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்திற்கு திரும்பியுள்ளனர். இவர்களுக்கு ரயில் மற்றும் பேருந்து கட்டமின்றி இலவசமாகவே பயணம் செய்துள்ளனர்.

உ.பி.யை சேர்ந்த மேலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மற்ற மாநிலங்களில் இருந்து அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்கான ரயில் மற்றும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்