கரோனாவுக்கு இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 7,466 பேர் பாதிப்பு: 175 பேர் உயிரிழப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

By ஏஎன்ஐ


இந்தியாவில் கரோனாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு 7 ஆயிரத்து 466 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 175 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்தறைஅமைச்சகம் தெரிவித்துள்ளது

இந்தியாவில் கரோனாவில் ஓட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோரி்ன் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து799 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 71 ஆயிரத்து 105 ஆக உயர்ந்துள்ளது. 89ஆயிரத்து 987 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். கரோனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 706 ஆக அதிகரித்துள்ளது

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,982 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 960 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 321 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் உயிரிழப்பு 316ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 180 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 67ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 197 ஆகவும், ஆந்திராவில் 59 ஆகவும் இருக்கிறது.

கர்நாடகாவில் 47 பேரும், பஞ்சாப்பில் 40 பேரும் பலியாகியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 27 பேரும், ஹரியாணாவில் 19 பேரும், பிஹாரில் 15 பேரும், ஒடிசா, கேரளாவில் தலா 7 பேரும், இமாச்சலப்பிரதேசத்தில் 5 பேர், ஜார்க்கண்ட், அசாமில் தலா 4 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்டில் 3 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,546 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 18,616 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 372 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 10,548 ஆகவும் அதிகரித்துள்ளது.

3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 16,281 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,495 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 15,662 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8003 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 8,067 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 7,453 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 7,170 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 4,536 பேரும், ஆந்திராவில் 3,251 பேரும், பஞ்சாப்பில் 2,158 பேரும், தெலங்கானாவில் 2,256 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 2,036 பேர், கர்நாடகாவில் 2,533 பேர், ஹரியாணாவில் 1,504 பேர், பிஹாரில் 3,296பேர், கேரளாவில் 1088 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 555 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 1,660 பேர், சண்டிகரில் 288 பேர் , ஜார்க்கண்டில் 469 பேர், திரிபுராவில் 242 பேர், அசாமில் 856 பேர், உத்தரகாண்டில் 500 பேர், சத்தீஸ்கரில் 399 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 276 பேர், லடாக்கில் 73 பேர், மேகாலயாவில் 21 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 14 பேர் குணமடைந்தனர். மணிப்பூரில் 55 பேர், கோவாவில் 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிக்கிம், மிசோரத்தில் அருணாச்சலப் பிரதேசமில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்