கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட ஊரடங்கில் 4-வது கட்டம் வரும் 31-ம் தேதி முடிவதையடுத்து, 5-வது லாக்டவுன் நீ்ட்டிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களையும் தனித்தனியாக தொலைப்பேசியில் அழைத்து மத்தியஉள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று கருத்துக்களைக் கேட்டறிந்தார்
4-வது கட்ட லாக்டவுன் முடிய இன்னும் 3 நாட்கள் இருக்கும் இருக்கும் நிலையில் இந்த கருத்துக்கேட்பு நடந்துள்ளது. கடந்த 4 கட்ட லாக்டவுனிலும் பிரதமர் மோடி காணொலி மூலம் மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து அதன்பின் லாக்டவுனை நீட்டிப்பது குறித்து அறிவிப்பை வெளியிட்டார்.
முதல்முறையாக மாநில முதல்வர்களுடன் அமித் ஷா லாக்டவுன் தொடர்பாக பேசி கருத்துக்களைக் கேட்டுள்ளார்.
முதல்வர்களுடன் அமித் ஷா என்ன பேசினார் என்பது குறித்த முழுமையான தகவல்கள் ஏதும் இல்லை. இருப்பினும் இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ 4-வது கட்ட லாக்டவுன் வரும் 31-ம் தேதியோடு முடிகிறது. அதன்பின் லாக்டவுன் நீட்டிக்கப்பட வேண்டுமா என்பது குறித்துமாநில முதல்வர்களிடம் கருத்துக்களை அமித் ஷா நேற்று கேட்டறிந்தார்.
மாநிலங்களில் எந்தெந்த பகுதிகளில் கரோனா பரவல் தீவிரமாக இருக்கிறது, கவலை தெரிவிக்கும் அம்சங்களாக என்ன உள்ளன. ஜூன் 1-ம் தேதிக்குப்பின் பொருளாதார நடவடிக்கைகளுக்காக மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்தலாமா என்பது குறித்து கேட்டிறிந்தார்.
ஆனால் பெரும்பாலான மாநில முதல்வர்கள் லாக்டவுன் தொடர்ந்து நீட்டிக்கப்பட வேண்டும். அதேசமயம், பொருளாதார நடவடிக்கைக்கான கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி இயல்பு வாழ்க்ைகக்கு கொண்டுவரலாம் எனத் தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவித்தனர்
லாக்டவுன் காலம் முடிய இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் விரைவில் மத்திய அரசு லாக்டவுன் தொடர்பாக அறிவிப்பு வெளியிடும் எனத் தெரிகிறது
வரும் 31-ம் தேதிவரை பள்ளிகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட்கள், ஹோட்டல்கள், நீச்சல்குளங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்றவை செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளன. அந்தத்தடை மேலும் நீட்டிக்கப்பட அதிகமான வாய்ப்பு உள்ளதாக மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
12 mins ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago