ஏழுமலையான் சொத்துகள் விற்பனை செய்யப்படாது- அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு

By என்.மகேஷ்குமார்

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சொத்துகள் விற்பனை செய்யப்படாது என அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமான அசையா சொத்துகளில் பராமரிக்க முடியாத 50 சொத்துகளை ஏலத்தில் விற்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த விற்பனைக்கு ஆந்திர அரசு தடை விதித்தது.

இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இதில் குழுவின் சிறப்பு உறுப்பினர் சேகர் ரெட்டி பேசும்போது, ஏழுமலையானின் சொத்துவிவரங்களை இணைய தளத்தில் பகிரங்கமாக வெளியிட வேண்டும். அப்போதுதான் தேவஸ்தானம் மீது எந்தவொரு புகாரும் எழாது என்றார். பிறகு இதையே முக்கியப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு அறங்காவலர் குழு விவாதித்தது.

பின்னர், இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கூறியதாவது:

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சொத்துக்கள் இனிவிற்கப்படாது. சுவாமியின் சொத்துக்களை விற்க தடை விதித்துகூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த விவகாரத்தில் தேவஸ்தானம் மீது அவதூறு பிரச்சாரம் செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதனை அரசுக்கும் அறங்காவலர் குழுபரிந்துரை செய்கிறது. தேவஸ்தான தங்கும் விடுதிகளில் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. இனி தங்கும் அறைகளை வழங்குவதில் புதிய விதிமுறைகள் பின்பற்றப்படும். மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கியதும், சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்