பெங்களூருவில் உள்ள எலஹங்காபகுதியில் 400 மீட்டர் நீளத்துக்கு ரூ.34 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. இதற்கு இந்து தேசியவாதி வீர் சாவர்க்கரின் பெயரை சூட்ட முதல்வர் எடியூரப்பா முடிவெடுத்தார். இதையடுத்து வீர் சவார்க்கரின் பிறந்தநாளான நேற்று, அந்த மேம்பாலத்தை எடியூரப்பா திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் மேம்பாலத்துக்கு சாவர்க்கர் பெயரை வைக்க முன்னாள் முதல்வரும், மஜத மாநில தலைவருமான குமாரசாமி, காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று நடைபெற இருந்த மேம்பால திறப்பு விழா திடீரென ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் கூறுகையில், “கர்நாடகாவில் இருக்கும் மலிவு விலை உணவகத்துக்கு ஏன் இந்திரா கேன்டீன் என்று பெயர் வைத்தீர்கள்? மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயரை ஏன் சூட்டினீர்கள்? வீர் சாவர்க்கர் சுதந்திர போராட்ட வீரர்களிலேயே தலை சிறந்தவர். அவர் பெயரை சூட்டியதில் எந்த தவறும் இல்லை.கரோனா ஊரடங்கின் காரணமாக வியாழக்கிழமை பாலத்தின் திறப்புவிழா நடக்கவில்லை. அடுத்த மாதத்தில் முதல்வர் எடியூரப்பா முறைப்படி அதே பெயரை சூட்டி திறந்து வைப்பார்'' என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago