புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்கு அவர்களிடம் பயணக்கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவி்ட்டது
கரோனா வைராஸால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கி அவதியுற்றனர். இந்தக் காட்சிகளையும், நடந்து செல்லும் நிகழ்வுகளையும், சைக்கிளில் செல்லும் சம்பவங்களையும் நாளேடுகள், தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்தும், படித்தும் உணர்ந்த உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து கடந்த 26-ம் தேதி வழக்காகப் பதிவு செய்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல், எம்ஆர் ஷா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை கடந்த செவ்வாய்கிழமை விசாரித்தது. அப்போது மத்திய அரசும், மாநில அரசுகள், புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்பது குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும்என உத்தரவிட்டு விசாரணையை 28-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல், எம்ஆர் ஷா ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரிக்கப்பட்டது. மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்வதற்கு கட்டணம் செலுத்துவதில் பல்வேறு கேள்விகள் இருக்கின்றன என நீதிபதிகள் தெரிவித்தனர். “ நமது நாட்டில் எப்போதும் எல்லா இடங்களிலும் இடைத்தரகர்கள் இருப்பார்கள். தொழிலாளர்களுக்கான டிக்கெட் கட்டணம் செலுத்தும் விவகாரத்தில் இடைத்தரகர்கள் இருப்பதை நாங்கள் விரும்பவி்ல்லை.
ஒரு புலம்பெயர் தொழிலாளி அடையாளம் காணப்பட்டால் அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க எத்தனை நாட்கள் தேவைப்படும். ஒரு வாரம் அல்லது 10 நாட்கள். அதற்கான காலக்கெடு என்ன.
ஒரு மாநிலம் புலம்பெயர் தொழிலாளியை அனுப்பி வைக்கிறது, அந்த தொழிலாளர் சார்ந்திருக்கும் மாநில அரசு அவரை அனுமதிக்க மறுக்கிறது. இதில் தெளிவான கொள்கை தேவை. புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன.
அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களையும் சொந்த மாநிலம் சென்று சேர்க்க எவ்வளவு காலம் தேவைப்படும். அவர்களுக்கு உணவும், அடிப்படை வசதிகளும் கிடைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கேட்டனர்.
இதற்கு பதில் அளி்த்த துஷார் மேத்தா,” கடந்த மே 1 முதல் 27ம் தேதி வரை 3,700 சிறப்பு ஷ்ராமிக் ரயில்கள் இயக்கப்பட்டு அதில் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக பேருந்துகள், ரயில்கள் மூலம் 91 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுள்ளார்கள். புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலம் அனுப்பும் காலக்கெடுவை அந்தந்த மாநில அரசுகள்தான் முடிவு எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்
அப்போது நீதிபதிகள், “ இந்திய உணவுக்கழகத்திடம் போதுமான அளவு உணவு தானியங்கள் இருக்கிறது என்றால், அவர்களுக்கு போதுமான உணவுகளை வழங்கி பயணிக்க அனுமதிக்கலாமே. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுவழங்குவதில் ஏன் பற்றாக்குறை ஏற்பட்டது, தங்குமிடங்களிலும் ஏன் பற்றாக்குறை ஏற்பட வேண்டும். அவர்கள் சொந்த ஊர் சென்று சேரும் வரை உணவு, குடிநீர் இலவசமாக வழங்கிட வேண்டும்.
பயணத்துக்காக முன்பதிவு செய்து அதற்காக வாரக்கணக்கில் புலம்பெயர் தொழிலாளர்கள் காத்திருப்பது பெரும் பிரச்சினை. தொழிலாளர்கள் தங்கள் பயணத்தை தொடங்கும்போது எந்த மாநிலத்திலிருந்து தொடங்குகிறார்களோ அந்த மாநில அரசு உணவு வழங்கிட வேண்டும், பயணத்தின் போது ரயில்வே துறை உணவும், தண்ணீரும் வழங்கிட வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு சென்று சேரும் வரை அவர்களுக்கு குடிநீர், உணவு, வழங்கிட வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்கு கட்டணம் செலுத்துவதில் குழப்பம் நீடிக்கிறது. அவர்கள் சொந்த ஊர் சென்று சேரும்வரை போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிக்கக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago