இந்தியாவில் தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேலாக கரோனவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்து சென்றுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 6,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 194 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனாவில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 33 ஆக அதிகரித்துள்ளது. கரோனவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 67 ஆயிரத்து 691 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 86 ஆயிரத்து 110 ஆகவும் உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 531 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 105 பேர், குஜராத்தில் 23 பேர், டெல்லியில் 15 பேர், உத்தரப் பிரதேசத்தில் 12 பேர், மத்தியப் பிரதேசத்தில் 8 பேர், தமிழகம், தெலங்கானா, மேற்கு வங்கத்தில் தலா 6 பேர், கர்நாடகா, ராஜஸ்தானில் தலா 3 பேர், பிஹார், ஜம்மு காஷ்மீரில் தலா இருவர், கேரளா, ஹரியாணா, ஆந்திராவில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,897 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 938 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 313 ஆகவும் அதிகரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 289 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் உயிரிழப்பு 303 ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 173 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் பலி எண்ணிக்கை 133 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 63 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 182 ஆகவும், ஆந்திராவில் 58 ஆகவும் இருக்கிறது.
கர்நாடகாவில் 47 பேரும், பஞ்சாப்பில் 40 பேரும் பலியாகியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 26 பேரும், ஹரியாணாவில் 18 பேரும், பிஹாரில் 15 பேரும், ஒடிசாவில் 7 பேரும், கேரளா, இமாச்சலப்பிரதேசத்தில் தலா 5 பேர், ஜார்க்கண்ட், அசாமில் தலா 4 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்டில் 3 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,948 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 17,948 ஆக உயர்ந்துள்ளது.
அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 645 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 9,909 ஆகவும் அதிகரித்துள்ளது.
3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 15,227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,264 பேர் குணமடைந்துள்ளனர். 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 15,105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,549 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 7,703 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 7,261 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 6,991 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 4,192 பேரும், ஆந்திராவில் 3,171 பேரும், பஞ்சாப்பில் 2,139 பேரும், தெலங்கானாவில் 2,098 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 1,921 பேர், கர்நாடகாவில் 2,418 பேர், ஹரியாணாவில் 1,381 பேர், பிஹாரில் 3,061 பேர், கேரளாவில் 1004 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 552 பேர் குணமடைந்துள்ளனர்.
ஒடிசாவில் 1,593 பேர், சண்டிகரில் 279 பேர் , ஜார்க்கண்டில் 448 பேர், திரிபுராவில் 230 பேர், அசாமில் 781 பேர், உத்தரகாண்டில் 469 பேர், சத்தீஸ்கரில் 369 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 273 பேர், லடாக்கில் 53 பேர், மேகாலயாவில் 20 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 12 பேர் குணமடைந்தனர். மணிப்பூரில் 44 பேர், கோவாவில் 68 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிக்கிம், மிசோரத்தில் அருணாச்சலப் பிரதேசமில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
10 mins ago
இந்தியா
21 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago