தமிழகத்தில் இருந்து பிஹார் மாநில தொழிலாளர்கள் 70,000 பேர் 53 ரயில்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். மேலும் 30,000 பேர் ரயில்களில் செல்வதற்காகத் தமிழக அரசின் இணையதளத்தில் பதிவுசெய்து காத்திருக்கின்றனர்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊடங் கின் 4-வது கட்டத்தில் சில தளர்வு கள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்ல அனுமதி வழங்கப் பட்டது. இதன் ஒரு கட்டமாக பிஹார் அரசின் ஒருங்கிணைப்புடன் தமிழகத்தில் சிக்கி உள்ள அம் மாநிலத் தொழிலாளர்களை தமிழ் நாடு அரசு திரும்ப அனுப்பத் தொடங்கியது.
மே 25-ம் தேதி வரை தமிழகத்தில் இருந்து இயக்கப்பட்ட 53 சிறப்பு ரயில்களில் பிஹாரைச் சேர்ந்த 70 ஆயிரம் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். இவர்கள் கோவை, திருப்பூர், திருவள்ளூர், ஈரோடு, சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தங்கியிருந் தவர்கள்.
இவர்களைத் தவிர மேலும் 30,000 பேர் பிஹார் திரும்ப தமிழகத் தின் பல்வேறு நகரங்களில் காத் திருக்கின்றனர். இவர்களையும் அனுப்பி வைக்க தமிழகம் மற்றும் பிஹார் மாநில அரசின் அதிகாரி கள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர்.
தமிழக அரசு ஒத்துழைப்பு
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பிஹார் மாநில உயர் அதிகாரியும் தமிழகத்தின் ஜெயங்கொண்டானைச் சேர்ந்த வருமான கே.செந்தில்குமார் ஐஏஎஸ் கூறும்போது, "தமிழக அரசி டம் இருந்து எங்களுக்கு தொடக்கம் முதலே முழு ஒத்துழைப்பு கிடைத்து வருகிறது. எனினும், இங்குள்ள சில ஊடகங்கள் தவ றான உள்நோக்கத்துடன் தமிழகத் தின் மீது அவதூறான செய்தி களை வெளியிட்டன. இதுகுறித்து ஜமுவாய் மாவட்ட நிர்வாகம் விசா ரித்த போது அவை பொய்யான செய்திகள் என தெரியவந்தது" என்றார்.
இதனிடையே, பிஹாரில் சிக்கி உள்ள கேரளாவைச் சேர்ந்த 900 தொழிலாளர்கள் நாளை (29-ம் தேதி) சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இவர்களு டன் தமிழகத்தைச் சேர்ந்த 120 பேரும் ரயிலில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
26 mins ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago