கரோனாவுக்கு எதிரான ஆன்டிவைரல்: அறிவியல் தொழில்நுட்பத்துறை தீவிரம்

By செய்திப்பிரிவு

ஐஐடி-ரூர்க்கியை சேர்ந்த பேராசிரியர் பிரவீந்திர குமார் முன்மொழிந்த கரோனாவுக்கு எதிரான அமைப்பு சார்ந்த வீரியமுள்ள ஆன்டிவைரல்களைக் கண்டறிதலுக்கான ஆய்வுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி மன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

உயர் முக்கியத்துவமுள்ளப் பகுதிகளில் ஆராய்ச்சியைத் தீவிரப்படுத்துதலின் கீழ் நிதி உதவி அளிக்கப்படும் இந்த ஆய்வு, சில மிக முக்கிய வைரல் பிரதியெடுக்கும் என்சைம்களை நோக்கி சிறிய மூலக்கூறுள்ள தடுப்பான்களைத் தேடும்.

கணினி-சார்ந்த உயர் உற்பத்தி மெய்நிகர்த் திரையிடல் அணுகுமுறையைப் பயன்படுத்தி பல்வேறு கலவையானத் தொகுப்புகளில் இருந்து ஆண்டிவைரல் மூலக்கூறுகள் இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டு, ஆண்டிவைரல் வீரியத்துக்காக சோதித்து சரிபார்க்கப்படும்.

ஆய்வில் இணைந்து பணிபுரியும் ஐஐடி-ரூர்க்கியை சேர்ந்த டாக்டர். ஷால்லி தோமர் மற்றும் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த டாக்டர். கௌரவ் ஷர்மா ஆகியோர்,கரோனாவுக்கு எதிராகக் கண்டறியப்பட்ட ஆண்டிவைரல் மூலக்கூறுகளின் வைரசுக்கு எதிரான திறனை சோதனை செய்வதிலும், மதிப்பிடுவதிலும் பணியாற்றி வருகிறார்கள்.


VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்