தொடரும் வெப்ப அலை; நாளை முதல் குறைய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

By செய்திப்பிரிவு

ராஜஸ்தான், ஹரியாணா, மத்திய பிரதேச மாநிலங்களில் வெப்ப அலை வீசும் எனவும், எனினும் நாளை முதல் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உம்பன் புயலுக்கு பிறகு நாடுமுழுவதும் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெப்ப நிலை மிகவும் வாட்டி வதைக்கும் நிலையில் மேலும் ஒருவாரத்திற்கு அனல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

தலைநகரான டெல்லியில் தொடர்ந்து வெப்பம் மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. அதிகபட்சமாக டெல்லி பாலம் விமான நிலையத்தில் நேற்று 47.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதே போன்ற கொடும் வெயில், வெப்பம் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் உணரப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் சாருவில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

இரண்டாவது நாளாக இன்றும் இதே நிலை காணப்படுகிறது. பல மாநிலங்களில் கரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள போதிலும் கடும் வெயில் காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

வடமேற்கு இந்தியா, மத்திய இந்தியா மற்றும் கிழக்கு இந்தியாவின் உள் பகுதிகள் ஆகியவற்றின் மீது நிலவும் வறண்ட வடமேற்கு காற்று காரணமாக, தற்போதைய வெப்ப அலை நிலைமைகள் தொடர்ந்து நிலவும் வாய்ப்பு உள்ளது.

ஹரியாணா, சண்டிகர், டெல்லி, மேற்கு உத்தரப்பிரதேசம், கிழக்கு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பஞ்சாப் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் ஒரு சில இடங்களில் மே 27 அன்று வெப்ப அலை நிலைகள் ஏற்படக்கூடும். குறிப்பாக
ராஜஸ்தான், ஹரியாணா, மத்திய பிரதேச மாநிலங்களில் வெப்ப அலை வீசும். எனினும் நாளை முதல் குறைய வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

52 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்