இந்தியாவிலேயே அதிக அளவில் கரோனா பாதிப்புகளும் மரணங்களும் அதிகமுள்ள மாநிலம் மகாராஷ்ட்ரா ஆகும். இந்நிலையில் பாஜக சிவசேனா தலைமை ஆட்சியை கடுமையாக விமர்சித்துள்ளது.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நாராயண் ரானே, “கரோனா பிரச்சினையை சிவசேனா அரசு சரியாகக் கையாளவில்லை. எனவே சிவசேனா தலைமை ஆட்சியை நீக்கி அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்” என்று பாஜக எம்.பி. நாராயண் ரானே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ரா அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் மாநில ஆளுநரைச் சந்தித்தார் சரத் பவார்.
இதனால் உத்தவ் தாக்கரே அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது. ஏன் இந்தத் திடீர் சந்திப்புகள் என்ற சலசலப்பு எழ மகாராஷ்ட்ரா அரசுக்குச் சிக்கல் என்ற செய்திகள் பரவத் தொடங்கின.
» திருப்பதி சொத்துகளை விற்க தடை விதிக்க வேண்டும்: ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு
» பெற்ற மகனே மறுக்க, இந்து மதத்தைச் சேர்ந்த முதியவருக்கு முஸ்லிம்கள் இறுதிச் சடங்கு
இதனையடுத்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், “உத்தவ் தாக்கரே அரசுக்கு எந்த விதப் பிரச்சினையும் இல்லை. சிலர் புரளியைக் கிளப்பி விடுகின்றனர்.
கரோனா பிரச்சினைக்காக ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்றால் முதலில் பாஜக ஆளும் குஜராத் அரசைத்தான் கலைக்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
16 mins ago
இந்தியா
21 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago