கரோனா வைரஸ் பரிசோதனைகளை அதிகரிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) திட்டமிட்டு வருகிறது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதையடுத்து வெளி மாநில தொழிலாளர்களை ரயில்கள் மூலம் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்க மத்திய, மாநிலஅரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன்படி, பல்வேறுமாநிலங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள்சொந்த மாநிலங்களுக்கு திரும்பிவருகின்றனர். வெளி மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களால் உத்தரபிரதேசம், பிஹார், மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தடுக்கவும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரை விரைவில் கண்டறியவும் பரிசோதனைகளை தீவிரப்படுத்த ஐசிஎம்ஆர் திட்டமிட்டு அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. ஏற்கெனவே ஒரு நாளைக்கு 1.4 லட்சம் மாதிரிகள் என்ற அளவில் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டது.
இது 2 லட்சமாக உயர்ந்துள்ளது. இதை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இது தொடர்பாக மாநிலஅரசுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
47 mins ago
இந்தியா
58 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago