கரோனா தடுப்பு நடவடிக்கை: ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

By செய்திப்பிரிவு

ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் லிண்டா ரெனால்ட்ஸுடன், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் .ராஜ்நாத் சிங் இன்று தொலைபேசி மூலம் உரையாடினார்.

கோவிட்-19 தொற்றுக்கு இரு நாடுகளிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இரண்டு பாதுகாப்பு அமைச்சர்களும் விவாதித்தனர். கோவிட்-19ஐ எதிர்கொள்ளும் சர்வதேச முயற்சிகளில் இந்தியாவின் பங்களிப்பு பற்றியும், தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றியும், லிண்டா ரெனால்ட்ஸிடம் ராஜ்நாத் சிங் எடுத்துரைத்தார்.

கோவிட்-19 தொடர்பான சவால்களை எதிர்கொள்ள, இந்தியா-ஆஸ்திரேலியா இடையோன ராணுவ உறவு, இரு நாடுகளும் மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்கான நல்ல அடிப்படையை வழங்குவதாக இருவரும் ஒப்புக் கொண்டனர்.

இந்தியா-ஆஸ்திரேலியா ராணுவ உறவு திட்டத்தின் கீழ் இருதரப்பு ராணுவ மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை முன்னோக்கி கொண்டு செல்வதில் இரு அமைச்சர்களும் தங்களது உறுதியைத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

58 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்