இந்தியாவில் கரோனாவில் குணமடைந்தோர் 60 ஆயிரத்துக்கு மேல் அதிகரிப்பு; 1.45 லட்சம் பேர் பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

By பிடிஐ

இந்தியாவில் கரோனாவின் பாதிப்பு அதிகரிக்கும் அதே நேரத்தில் குணமடைந்தோர் வீதமும் உயர்ந்து வருகிறது. இதுவரை கரோனாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்து, 41.61 சதவீமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவில் 6,535 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 380 ஆக அதிகரித்துள்ளது.

இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 80 ஆயிரத்து 722 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 60 ஆயிரத்து 490 ஆகவும் அதிரித்துள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் 146 ேபர் உயிரிழந்துள்ளனர். இதில் மகாராஷ்டிராவில் 60 பேர், குஜராத்தில் 30 பேர், டெல்லியில் 15 பேர், மத்தியப்பிரதேசத்தில் 10 பேர், தமிழகத்தில் 7 பேர், மேற்கு வங்கத்தில் 6 பேர், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானில் தலா 4 பேர்,தெலங்கானாவில் 3 பேர், இமாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகாவில் தலா இருவர், கேரளாவில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

'மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,695 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 888 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 300 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் உயிரிழப்பு 276 ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 167 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 118ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 56 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 165 ஆகவும், ஆந்திராவில் 56 ஆகவும் இருக்கிறது.

கர்நாடகாவில் 44 பேரும், பஞ்சாப்பில் 40 பேரும் பலியாகியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 23 பேரும், ஹரியாணாவில் 16 பேரும், பிஹாரில் 13 பேரும், ஒடிசாவில் 7 பேரும், கேரளா, இமாச்சலப்பிரதேசத்தில் தலா 5 பேர், ஜார்க்கண்ட், அசாமில் தலா 4 பேரும் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்டில் 3 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,667 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 15,786 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்து 082 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 8,731 ஆகவும் அதிகரித்துள்ளது.

3-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 14,460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,636 பேர் குணமடைந்தனர். 4-வது இடத்தில் உள்ள டெல்லியில் 14 ஆயிரத்து 053 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,771 பேர் குணமடைந்துள்ளனர்.

ராஜஸ்தானில் 7,300 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 6,859 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 6,532 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்

மேற்கு வங்கத்தில் 3,816 பேரும், ஆந்திராவி்ல் 3,110 பேரும், பஞ்சாப்பில் 2,060 பேரும், தெலங்கானாவில் 1,920 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 1,668 பேர், கர்நாடகாவில் 2,182- பேர், ஹரியாணாவில் 1,184 பேர், பிஹாரில் 2,730 பேர், கேரளாவில் 896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 532 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 1,438 பேர், சண்டிகரில் 238 , ஜார்க்கண்டில் 377 பேர், திரிபுராவில் 194 பேர், அசாமில் 526 பேர், உத்தரகாண்டில் 349 பேர், சத்தீஸ்கர் 291 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 223 பேர், லடாக்கில் 52 பேர், மேகாலயாவில் 14 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 12 பேர் குணமடைந்தனர். மணிப்பூரில் 39 பேர், கோவாவில் 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிக்கிம், மிசோரத்தில் ஒருவர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்