வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகாவுக்குள் வரும் மக்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை மாநில அரசு வகுத்துள்ள போது, மத்திய அமைச்சர் வி. சதானந்தா கவுடாவை தனிமைப்படுத்தாதது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி நேற்று சமூக ஊடகங்களில் பெரும் விவாதப்பொருளாதாக மாறியது
கர்நாடக அரசு வகுத்துள்ள விதிமுறைகள் மக்களுக்கு மட்டும்தானா விவிஐபிக்களும், அரசியல்வாதிகளுக்கும் பொருந்ததா என்று மக்கள் கேள்வி எழுப்ப, பல்வேறு காரணங்களைக் கூறி கர்நாடக அரசு சமாளித்தது.
கர்நாடகாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து நேற்று முதல் தொடங்கியது. வெளிமாநிலங்களில் இருந்து வருவோர் தங்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்,
குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து வருவோர் அரசின் தனிமை முகாமில் 7 நாட்கள் தங்க வேண்டும்.
அங்கு கரோனா அறிகுறி ஏதும் இல்லை என்று தெரியவந்து, பரிசோதனையிலும் நெகட்டிவாக வந்தால், வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என விதிமுறை வித்திருந்தது.
இந்த சூழலில் டெல்லியிலிருந்து நேற்று மத்திய உரம், மருந்து மற்றும் ரசாயனத்துறை இணையமைச்சர் சதானந்தா கவுடா பெங்களூரு வந்தார். ஆனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் வழக்கம் போல் பெங்களூருக்குள் சென்றார்.
சதானாந்தா கவுடா டெல்லியிலிருந்து வந்தும் அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் இருப்பது குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். ட்வி்ட்டர், ஃபேஸ்புக்கில் சதானந்தா கவுடாவுக்கு எதிராக நெட்டின்சன்கள் சராமரி கேள்வியை எழுப்பியதோடு, கர்நாடக அரசுக்கும் டேக் செய்து கேள்வி எழுப்பினர். கர்நாடக அரசு வகுத்த விதிமுறை மக்களுக்கு மட்டும்தானா, விவிஐபிக்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும்இல்லையா என்று கேள்வி எழுப்பினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கர்நாடக அரசு அளித்த விளக்கம் அளி்த்து சதானந்தா கவுடாவை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியது. அதில்” மத்திய அரசு வெளியிட்டஉத்தரவில் அத்தியாவசியப் பணிகளை செய்யும் பணியில் இருப்போர், துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு தனிமை முகாமில் செல்வதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆதலால், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு மட்டும் தனிமை முகாமலிருந்து விலக்கு இருக்கிறது” எனத் தெரிவித்தது.
இந்த விவகாரம் கர்நாடக ஊடகங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்ட நிலையில் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுைகயில் “ நான் பொறுப்பு வகிக்கும் மருந்து, ரசாயனத்துறை, அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருப்பதால் அதற்கு விலக்கு இருக்கிறது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த வேண்டும்தானே. யாரும் வெளியே துணிச்சலாக வராமல் எப்படி கரோனாவைத் தடுக்க முடியும். மருந்து வழங்கல் துறையின் அமைச்சராக இருக்கும் நான், மருந்து இருப்பு, உற்பத்தி, சப்ளை ஆகியவற்றை பராமரிப்பது அவசியம் அது எனது கடமை. என்னுடைய பாதுகாப்புக்காக ஆரோக்கிய சேது செயலி செல்போனில் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
மாநிலஅமைச்சர் சுரேஷ் குமார் கூறுகையில் “ மருந்து வழங்கல் துறையை கையாள்வதால் சதானந்தா கவுடாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவையும் பிறப்பித்துள்ளது” எனத் தெரிவித்தார்
இந்த சர்ச்சைக்குப்பின், மத்திய அரசு வெளியிட்ட விதிமுறை, உத்தரவையும் கர்நாடக அரசு மக்களுக்கு வெளிப்படையாக அறிவித்து, மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், அதிகாரிகள் போன்றோர் அலுவலக ரீதியாகச் செல்லும் போது அவர்களுக்கு விலக்கு இருக்கிறது எனத் தெரிவித்தது
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago