கரோனா தொற்று: குணமடைவோர் விகிதம் 41.57 சதவீதமாக உயர்வு

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றில் இருந்து மீண்டு குணமடைவோர் விகிதம் 41.57 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் பின்னர் மே 31- வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டது. எனினும் பல மாநிலங்களிலும் ஊரடங்கு வழிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. எனினும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

இந்தநிலையில் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது:

படிப்படியாகவும், முன்னெச்சரிக்கையுடனும், செயல்திறனுடனும் கூடிய அணுகுமுறையை மேற்கொண்டு இந்திய அரசு மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து கோவிட்-19 நோய் பரவாமல் தடுப்பது, கட்டுப்படுத்துவது, அது தொடர்பான மேலாண்மை ஆகியவற்றுக்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மிக உயரிய அளவில் தொடர்ந்து பரிசீலனை செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை 57 ஆயிரத்து 720 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3280 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

குணமடைவோர் மொத்த சதவிகிதம் 41.57 சதவீதம். இதுவரை இந்த நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்கள் 1,38,845 பேர். மருத்துவ கண்காணிப்பின் கீழ் இருப்பவர்கள் 77103 பேர்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

47 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்