ஓட்டுனர், நடத்துனர் உரிமங்கள், வாகனச் தகுதிச் சான்று உள்ளிட்ட ஆவணங்களைப் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்பட அனைத்து அலுவலகங்கள் மூடப்பட்டன. மே 18-க்கு பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அரசு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் குறைந்த எண்ணிக்கையில் பழகுநர் உரிமம், ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு, தகுதிச்சான்று வழங்கும் பணி நடைபெறுகிறது.
ஊரடங்கு அமலுக்கு வந்த போது மோட்டார் வாகனம் தொடர்பான பல்வேறு ஆவணங்களை புதுப்பித்தலில் பல்வேறு சிரமங்கள் எழுந்ததால் பிப்ரவரி 1 முதல் ஜூன் 30 வரை செல்லுபடியாகும் வாகன தகுதிச்சான்று, அனைத்து வகையான பெர்மிட், ஓட்டுனர், நடத்துனர் உரிமங்கள், வாகன பதிவு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
தற்போது அமலில் இருக்கும் 4-ம் கட்ட ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் பொதுப் போக்குவரத்து தொடங்கவில்லை. கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை. முழுமையாக இயல்பு நிலை திரும்பவில்லை.
இதையடுத்து வாகன தகுதிச்சான்று, அனைத்து வகையான பெர்மிட், ஓட்டுனர், நடத்துனர் உரிமங்கள், வாகன பதிவு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை ஜூன் 31 வரை நீட்டித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago