லக்னோவில் ரம்ஜானை முன்னிட்டு அஷிபாக் ஈத்கா பகுதியில் ஈத்கா இமாம் மவுலானா காலித் ரஷித் மற்றும் சிலர் சமூகவிலகலுடன் தொழுகை நடத்தினர்.
கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மாலை புனித ரமலான் நோன்பை முஸ்லிம் மக்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினார். கரோனா வைரஸ், லாக்டவுன் ஆகிய நெருக்கடிகளுக்கு மத்தியில் புனித ரமலான் நோன்பை சமூக விலகலுடன் கடைப்பிடித்த முஸ்லிம் மக்கள் நோன்புக் காலம் முடிந்தது. கேரளா, ஜம்மு காஷ்மீரில் மட்டும் புனித ரமலான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
வளைகுடா நாடுகளில் நேற்று புனித ரமலான் பண்டிகை கொண்டாடுவதைப் பின்பற்றி கேரளாவும், ஜம்மு காஷ்மீர் மாநிலமும் நேற்று ரமலான் பண்டிகையைக் கொண்டாடின. நாட்டின் மற்ற மாநிலங்களில் இன்று கொண்டாடப்படுகிறது.
சிவப்பு மண்டலத்தில் உள்ள மக்கள் வீட்டிலேயே சமூக விலகலைக் கடைப்பிடித்து தொழுகை நடத்த வேண்டும், பச்சை மண்டலங்களில் உள்ள மக்கள் மசூதிக்குச் செல்லாமல் தொழுகைக்கான இடத்தில் நமாஸ் செய்யலாம், தொழுகை நடத்தும்போது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும், 10 முதல் 20 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
அதன்படி முஸ்லிம் மக்கள் வீடுகளில் தொழுகை நடத்தினர். அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையில் சமூக விலகலுடன் உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி தொழுகை நடத்தினர். லக்னோவில் ரம்ஜானை முன்னிட்டு அஷிபாக் ஈத்கா பகுதியில் ஈத்கா இமாம் மவுலானா காலித் ரஷித் மற்றும் சிலர் சமூகவிலகலுடன் தொழுகை நடத்தினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
44 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago