ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மாலை புனித ரமலான் நோன்பை முஸ்லிம் மக்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினார். கரோனா வைரஸ், லாக்டவுன் ஆகிய நெருக்கடிகளுக்கு மத்தியில் புனித ரமலான் நோன்பை சமூக விலகலுடன் கடைப்பிடித்த முஸ்லிம் மக்கள் நோன்புக் காலம் முடிந்தது. கேரளா, ஜம்மு காஷ்மீரில் மட்டும் புனித ரமலான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.
வளைகுடா நாடுகளில் நேற்று புனித ரமலான் பண்டிகை கொண்டாடுவதைப் பின்பற்றி கேரளாவும், ஜம்மு காஷ்மீர் மாநிலமும் நேற்று ரமலான் பண்டிகையைக் கொண்டாடின. நாட்டின் மற்ற மாநிலங்களில் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி பிரதமர் மோடி முஸ்லிம் மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:
‘‘ஈத் முபாராக்!
ரம்ஜான் வாழ்த்துக்கள். இந்த திருநாளில் கருணை, சகோதரத்துவம் மற்றும் மதநல்லிணக்கம் மேலும் அதிகரிக்கட்டும். ஒவ்வொருவரும் ஆரோக்கியத்துடனும், செழிப்புடனும் வாழவேண்டும்’’ என பிரதமர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
இந்தியா
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
14 hours ago