இந்தியாவில் ஒரே நாளில் 7,000-ஆக அதிகரித்த கரோனா பாதிப்பு: 4ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு; 57 ஆயிரம் பேர் குணமடைந்தனர்

By பிடிஐ

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 7 ஆயிரத்தைத் தொட்டுள்ளது, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 977 பேர் என அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 38ஆயிரத்து 845 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 57 ஆயிரத்து 720 ஆகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 77ஆயிரத்து 103 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 154 ேபர் உயிரிழந்துள்ளனர், இதன் மூலம் உயிரிழப்பு 4 ஆயிரத்து 21 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்து வரும் சதவீதம் இந்தியாவில் 41.57 சதவதீமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 154 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் மகாராஷ்டிராவில் 58 பேர், டெல்லியில் 30 பேர், குஜராத்தில் 29 பேர், மத்தியப்பிரதேசத்தில் 9 பேர், தமிழகத்தில் 8பேர், உத்தரப்பிரதேசத்தில் 6 பேர், தெலங்கானாவில் 4 பேர், ராஜஸ்தான், மேற்கு வங்கத்தில் தலா 3 பேர், பிஹாரில் இருவர், பஞ்சாப், உத்தரகாண்டில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

'மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,635 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 858 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 290 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 272 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் உயிரிழப்பு 261 ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 163 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 53 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 161 ஆகவும், ஆந்திராவில் 56 ஆகவும் இருக்கிறது.

கர்நாடகாவில் 42 பேரும், பஞ்சாப்பில் 40 பேரும் பலியாகியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 21 பேரும், ஹரியாணாவில் 16 பேரும், பிஹாரில் 13 பேரும், ஒடிசாவில் 7 பேரும், கேரளா, ஜார்க்கண்ட், அசாமில் தலா 4 பேரும் உயிரிழந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்டில் தலா 3 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,231 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 14,600 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 277 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 8,324 ஆகவும் அதிகரித்துள்ளது.

3-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 14,056 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,412 பேர் குணமடைந்தனர். 4-வது இடத்தில் உள்ள டெல்லியில் 13 ஆயிரத்து 418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,297 பேர் குணமடைந்துள்ளனர்.

ராஜஸ்தானில் 6,742 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 6,371 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 6,540 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்

மேற்கு வங்கத்தில் 3,667 பேரும், ஆந்திராவி்ல் 2,823 பேரும், பஞ்சாப்பில் 2,060 பேரும், தெலங்கானாவில் 1,854 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 1,621 பேர், கர்நாடகாவில் 2,089- பேர், ஹரியாணாவில் 1,184 பேர், பிஹாரில் 2,587 பேர், கேரளாவில் 847 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 521பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 1,336 பேர், சண்டிகரில் 238 , ஜார்க்கண்டில் 370 பேர், திரிபுராவில் 191 பேர், அசாமில் 378 பேர், உத்தரகாண்டில் 317 பேர், சத்தீஸ்கர் 252 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 203 பேர், லடாக்கில் 52 பேர், மேகாலயாவில் 14 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 12 பேர் குணமடைந்தனர். மணிப்பூரில் 32 பேர், கோவாவில் 66 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிக்கிம், மிசோரத்தில் ஒருவர், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவில் பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்