பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஜதின் ராம் (19) – பிந்தியா (18) தம்பதி. பஞ்சாப் மாநிலம் லூதியானா நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஜதின் ராம் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவருக்கு வேலை பறிபோனது. இதையடுத்து, சொந்த ஊர் செல்வதற்காக அவர்கள் சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்ய முயன்றனர். ஆனால், அவர்களுக்கு பயணச் சீட்டு கிடைக்கவில்லை. இதனால் தங்கள் ஊருக்கு நடந்து செல்ல அவர்கள் முடிவெடுத்தனர். அதன்படி, கடந்த வாரம் லூதியானாவில் இருந்து தனது 9 மாத கர்ப்பிணி மனைவியுடன் ஜதின் ராம் நடைபயணமாக புறப்பட்டார். சுமார் 100 கி.மீ. தூரம் நடந்த நிலையில், ஹரியாணாவின் அம்பாலா நகருக்கு அவர்கள் வந்து சேர்ந்தனர்.
அப்போது திடீரென பிந்தியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அங்கிருந்த போலீஸாரின் உதவியுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தனது மனைவியை ஜதின் ராம் அனுமதித்தார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்துவிட்டது. போதிய ஊட்டச்சத்து இல்லாததால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago