கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் பிறப்பிக்கப்பட்ட தேசிய அளவிலான ஊரடங்கு, விளையாட்டு வீரர்களின் நடவடிக்கைகளை முடக்கி உள்ளது. இவர்களின் குடும்பத்தினர் வேலையை இழந்திருப்பதால் வாழ்வாதார தேவைகளை சமாளிக்க விளையாட்டு வீரர்கள் பலரும் வருமானம் ஈட்டும் வகையில் பிற வேலைகளை செய்ய வேண்டியதாகி விட்டது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியில் 2 விளையாட்டு வீரர்களின் நிலை மோசமாகி விட்டது.இதில் ஒருவரான நேஹா, வாரணாசி நகரின் எல்லையில் உள்ளசிதைபூரின் தரம்வீர் காலனியில் வசித்து வருகிறார். இங்குள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில்10-ம் வகுப்பு தேர்வு எழுதி முடிவுகளுக்காகக் காத்திருக்கிறார்.
தேசிய அளவிலான ஜூனியர் மகளிர் கால்பந்து போட்டியில் ஐந்து முறை நேஹா விளையாடி இருக்கிறார். இவரது தந்தை அஜய்குமார் மற்றும் இரண்டு சகோதரர்கள் கூலி வேலை செய்துவந்தனர். ஊரடங்கால் இவர்களதுஅன்றாட பிழைப்பு பாதிக்கப்பட்டது. இதனால் தள்ளுவண்டியில் காய்கறிகளை விற்க தொடங்கி விட்டார் நேஹா.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் நேஹா கூறும்போது, "தேசிய அளவிலான போட்டியில் விளையாடிதன் பலனாக இப்பகுதியினர் என்னை நன்கு அடையாளம் கண்டு கொள்கின்றனர். இந்த புகழை பயன்படுத்தி விற்கும் காய்கறி வியாபாரத்தின் மூலம் 2 வேளை உணவுக்கு பணம் கிடைக்கிறது. கரோனாவால் விளையாடவும் தற்போது வழியில்லை என்பதால் ஸ்பான்சர் செய்பவர்களிடம் இருந்தும் பணம் கிடைப்பதில்லை" என்றார்.
வாரணாசியின் கஜோரி பகுதியைச் சேர்ந்த தேசிய ஹாக்கிவிளையாட்டு வீரரான கோபியும் இதே நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வரும் கோபியின் குடும்பமும் ஏழ்மையானது. இதனால் கோபி பாண்டேபூரில் உள்ள தனது தந்தையின் கடையில் பழங்களை விற்கத் தொடங்கிவிட்டார். இவர்2016-ம் ஆண்டு முதல் உத்தரபிரதேச மாநிலம் சார்பில் தேசிய ஹாக்கி விளையாட்டு போட்டியில் விளையாடி வருகிறார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago