உம்பன் புயல் பாதிப்பு: தேசிய பேரிடர் மீட்புப்படை கூடுதல் குழுக்கள் விரைவு

By செய்திப்பிரிவு

உம்பன் புயலுக்குப் பிந்தைய மேலாண்மைப் பணிகளுக்காக 10 கூடுதல் தேசிய பேரிடர் மீட்புப்படைக் குழுக்கள் அனுப்பப்பட்டன.

வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் 20-ம் தேதி பிற்பகலில் மேற்கு வங்கம், வங்கதேசக் கடல் பகுதி வழியாகக் கரையைக் கடந்தது.

உம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு பர்கானா, தெற்கு 24 பர்கானா மாவட்டங்கள் முற்றிலும் நாசமடைந்துள்ளன. இந்த மாவட்டத்தை மறுகட்டமைப்பு செய்யும் அளவு புயல் கடும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றுள்ளது. கொல்கத்தா, கிழக்கு மிட்னாபூர், ஹராவிலும் புயலால் சேதங்கள் ஏற்பட்டாலும் இரு மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் குறைவுதான்.

நார்த் 24 பர்கானாவில் 17 பேர், கொல்கத்தவில் 15 பேர், பசிராத்தில் 10 பேர், புயல் கரையைக் கடந்த சுந்தரவனக்காடுகள் அடங்கிய தெற்கு பர்கானாவில் 4 பேர் என மொத்தம் 80 பேர் புயலுக்குப் பலியாகியுள்ளனர் என மேற்கு வங்க அரசு தெரிவிக்கிறது.

லட்சக்கணக்கான வீடுகள், பாலங்கள், கடைகள் புயல் காற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

மேற்கு வங்கம மற்றும் ஒடிசாவில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

இந்தநிலையில் உம்பன் புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக கூடுதல் குழுக்களைப் பணியமர்த்துமாறு ,மேற்கு வங்க அரசின் பேரிடர் மேலாண்மை மற்றும் குடிமைப் பாதுகாப்பு முதன்மைச் செயலரின் எழுத்துபூர்வமான வேண்டுகோளை அடுத்து, தேசிய பேரிடர் மீட்புப்படையின் 10 கூடுதல் குழுக்கள், மேற்கு வங்கத்துக்கு அனுப்பப்பட்டு, அவை வெகு விரைவில் அங்கு சென்றடைய உள்ளன. குழுக்கள் இன்று பின்னிரவில் கொல்கத்தா சென்றடையக்கூடும்.

மேற்கு வங்க மாநிலத்தின் புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகளுக்காக ஏற்கனவே 26 தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 10 குழுக்கள் கூடுதலாக அனுப்பப்படுவதால், மொத்தம் 36 குழுக்கள், உம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கத்தின் 6 மாவட்டங்களில் பணியில் ஈடுபடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்