உங்கள் கடமையைச் செய்யுங்கள், நிதி நடவடிக்கைகளை எடுங்கள் என மத்திய அரசிடம் துணிச்சலாக ரிசர்வ் வங்கி கவர்னர் சொல்ல வேண்டும் என காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார்
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது வங்கிக்கடனுக்கான வட்டியை 40 புள்ளிகள் உடனடியாகக் குறைத்து அறிவித்தார்.
கடந்த இரு மாதங்களில் 2-வது முறையாக வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்து. மேலும், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல்முறையாக இந்தியாவின் வளர்ச்சி சரிவைச் சந்திக்கிறது.
2020-21-ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முதல்முறையாக மைனஸில் இருக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்தார்
» ‘தாடி’ வைத்திருந்த வழக்கறிஞரை அடித்த ம.பி.போலீஸ்: விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
» மே-16ம் தேதி கரோனா தொற்று பூஜ்ஜியமாகும் என்று யாரும் கூறவில்லை: நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால்
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் மூத்ததலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு பல்ேவறு அறிவுரைகளைத் தெரிவி்த்து பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில் “ தேசத்தில் நுகர்வு பழக்கம், தேவை சீர்குலைந்துவிட்டது, 2020-21-ம் நிதியாண்டில் தேசத்தின் பொருளதார வளர்ச்சி நெகட்டிவாக இருக்கும் என்று ரிசர்்வ் வங்கி கவர்னர் கூறுகிறார். பிறகு ஏன் சந்தையில் அதிகமான பணப்புழக்கத்தை செலுத்துகிறார்.
உங்கள் கடமையைச் செய்யுங்கள், நிதி நடவடிக்கை எடுங்கள் என்று வெளிப்படையாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் மத்தியஅரசிடம் தெரிவிக்க வேண்டும்.
ரிசர்வ் வங்கி நேற்று அறிக்கை வெளியிட்டபின், மத்திய அரசோ அல்லது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ அதைப்பற்றி பேசுவதற்கு பதிலாக தாங்கள் அறிவித்த ரூ.20லட்சம் கோடி திட்டத்தைப் பற்றித்தான் புகழ்கிறார்கள். அவர்கள் அறிவித்த நிதித்தொகுப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்துக்கும் குறைவுதான்.
ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதகமான வளர்ச்சிக்கு(மைனஸ்) கொண்டு சென்றுவிட்டதை நினைத்து ஆர்எஸ்எஸ் வெட்கப்பட வேண்டும்
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago