காணாமல் போன குழந்தைகளை மீட்க புதிய திட்டம்: ரயில்வே துறையுடன் இணைந்து குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அமல்

By ஆர்.ஷபிமுன்னா

நாடு முழுவதும் காணாமால் போகும் குழந்தைகளை மீட்கும் முயற்சிகளை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அதிகரிக்க உள்ளது.

இதில் முதல்கட்டமாக ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து சிறப்பு செயல் திட்டத்தை தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் காணாமல் போகும் மற்றும் மீட்கப்படும் குழந்தைகள் விவரங்களை வெளியிட ‘கோயா பயா’ (khoya-paya - காணாமல் போனவர்களும், கிடைத்தவர்களும்) என்ற இணையதளத்தை மத்திய தகவல் தொடர்புத் துறையுடன் இணைந்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை ஏற்படுத்தியுள்ளது. இதனை அமைச்சர் மேனகா காந்தி கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்தார்.

இந்த இணைய தளத்தில் பதிவு செய்யப்படும் காணாமல் போன குழந்தைகளின் விவரங்கள் உடனடியாக நாடு முழுவதும் உள்ள காவல்துறை தலைமை அலு வலகங்கள், குழந்தைகள் நல இணைய தளங்கள் போன்றவற் றுக்கும் அனுப்பப்படுகிறது. இதனால் மீட்கப்படும் குழந்தை கள் எண்ணிக்கை சற்று அதிகரித் துள்ளது. இதைத் தொடர்ந்து ‘கோயா பயா’ மூலம் குழந்தைகளை மீட்கப்படுவதை அதிகரிக்கும் முயற்சியில் மேனகா காந்தி இறங்கியுள்ளார்.

நாட்டின் ரயில் நிலையங்களில் குழந்தைகள் காணாமல்போவது அதிகமாக இருப்பதால், இது தொடர்பாக ரயில்வே காவல் நிலை யங்களில் பதிவாகும் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ‘கோயா பயா’வில் பதிவு செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, “புகாரை தொடர்ந்து மீட்கப்பட்ட குழந்தைகள் அல்லது மீட்பதற்காக தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முயற்சி ஆகியவற்றை ‘கோயா பயா’வில் பதிவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபடும் பொதுநல அமைப்புகளுக்கும் இது உதவியாக இருக்கும் என்று மேனகா கருதுகிறார். மேலும் இந்த விவரங்களை இணையதளத்தில் காண்பவர்களும் குழந்தைகளை தேடும் முயற்சியில் ஈடுபட ஏதுவாக இருக்கும் என்பதும் மேனகா காந்தியின் எதிர்பார்ப்பு” என்றனர்.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 70 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாக கூறப்படுகிறது. தேசிய குற்றப்பதிவு மைய புள்ளிவிவரப்படி, 2011 முதல் 2015 வரை காணாமல் போன குழந்தைகள் எண்ணிக்கை முறையே 90654, 66038, 77721, 73549 மற்றும் 15988 (ஏப்ரல் வரை) ஆக உள்ளது. இதில், மீட்கப்பட்டவர்கள் எண்ணிக்கை முறையே 34406, 26896, 41089, 31711 மற்றும் 6921 (ஏப்ரல் வரை) எனப் பதிவாகி உள்ளது.

டெல்லியில் மட்டும் அன்றாடம் குழந்தைகளை இழந்து தவிக்கும் குடும்பங்கள் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போகும் குழந்தைகளில் சுமார் 50 சதவீதம் பேர் மட்டும் டெல்லி போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப் படுகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்