அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 6,654 பேர் பாதிப்பு; 137 பேர் உயிரிழப்பு: 1.25 லட்சத்தைக் கடந்தது

By பிடிஐ

இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத வகையில் 6 ஆயிரத்து 654 பேருக்கு பாஸிட்டிவ் உறுதியானது, 137 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய சுகாதரத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது

கரோனாவில் இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளது. 69 ஆயிரத்து 597 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், 51 ஆயிரத்து 784 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 720 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 137 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதில் மகாராஷ்டிராவில் 63 பேர், குஜராத்தில் 29 பேர், டெல்லி, உத்தரப்பிரதேசத்தில் தலா 14 பேர், மேற்குவங்கத்தில் 6 பேர், தமிழகத்தில் 4 பேர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஆந்திராவில் தலா இருவர், ஹரியாணாவில் ஒருவர் இறந்துள்ளனர்

லாக்டவுன் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நடைமுறையில் இருந்தும் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன என்ற விமர்சனங்கள் எழுகின்றன. அதற்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, லாக்டவுன் இல்லையென்றால், நடைமுறைப்படுத்தாவி்ட்டால், இந்தியாவில் 2.10 லட்சம் பேர் உயிரிழந்திருப்பார்கள், 36 முதல் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் எனத் தெரிவித்தனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 1517 ஆக அதிகரித்துள்ளது.

அடுத்த இடத்தில் உள்ள குஜராத்தில் உயிரிழப்பு 802 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 272 ஆக அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 265 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் உயிரிழப்பு 208 ஆகவும், ராஜஸ்தானில் பலி எண்ணிக்கை 153 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது. தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 45 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 152ஆகவும், ஆந்திராவில் 55 ஆகவும் இருக்கிறது.

கர்நாடகாவில் 41 பேரும், பஞ்சாப்பில் தலா 39 பேரும் பலியாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் 20 ேபரும், ஹரியாணாவில் 16 பேரும், பிஹாரில் 11 பேரும், கேரளாவில் 4 பேரும், ஜார்க்கண்ட், ஒடிசா, அசாமில் தலா 4 பேரும் உயிரிழந்துள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் 3 பேரும், மேகாலயாவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,582 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 12,583 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 14ஆயிரத்து 753 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 7,128 ஆகவும் அதிகரித்துள்ளது.

3-வதுஇடத்தில் உள்ள குஜராத்தில் 13,268 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,880 பேர் குணமடைந்தனர். 4-வது இடத்தில்உள்ள டெல்லியில் 12ஆயிரத்து 319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,897 பேர் குணமடைந்துள்ளனர்.

ராஜஸ்தானில் 6,494 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 6,170 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 5,735 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 3,332 பேரும், ஆந்திராவி்ல் 2,709 பேரும், பஞ்சாபில் 2,029 பேரும், தெலங்கானாவில் 1,761 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 1,489 பேர், கர்நாடகாவில் 1,743 பேர், ஹரியாணாவில் 1,067 பேர், பிஹாரில் 2,177 பேர், கேரளாவில் 732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 512 பேர் குணமடைந்துள்ளனர்.

ஒடிசாவில் 1,189 பேர், சண்டிகரில் 218 , ஜார்க்கண்டில் 308 பேர், திரிபுராவில் 175 பேர், அசாமில் 259 பேர், உத்தரகாண்டில் 153 பேர், சத்தீஸ்கர் 172 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 168 பேர், லடாக்கில் 44 பேர், மேகாலயாவில் 14 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 10 பேர் குணமடைந்தனர்.மணிப்பூரில் 26 பேர், கோவாவில் 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவு, பாதிக்கப்பட்டோர் யாருமில்லை''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்