கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கொண்டுவரப்பட்ட லாக்டவுனில் ஏப்ரல் 30 முதல் மே 12-ம் தேதிவரை 66 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மாநிலங்களுக்கு இடையே பயணி்த்துள்ளனர் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. ஊரடங்கு நடவடிக்கையால் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக நடந்து சொந்த மாநிலங்களுக்கு செல்லத் தொடங்கினர்.
ஏறக்குறைய ஒரு மாதத்துக்குப்பின் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலத்துக்கு அனுப்ப ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை மாநிலங்களுக்கு இடையே மத்திய அரசு இயக்கியது. ஏப்ரல் 30 முதல் மே 6 வரையிலான இந்த காலகட்டத்தில் மாநிலங்களுக்கு இடையே 27.15 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர் என்றும், மே 7-ம் தேதி முதல் 12-ம் தேதிவரை 39.71 லட்சம் மக்கள் பயணித்துள்ளனர் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் செல்ல மத்திய அரசு ரயில்களை இயக்கிய பின்பும், மாநில அரசுகள் பேருந்துகளை இயக்கியபின், மாநிலங்களுக்கு இடையே மக்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளது.
வரும் 25-ம் தேதி முதல் மத்திய அரசு உள்நாட்டு விமானப்போக்குவரத்து சேவையை தொடங்க இருப்பதால், அதன்பின் மக்களின் போக்குவரத்து மேலும் அதிகரிக்கும். மக்கள் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடாது, தாங்கள் செல்ல வேண்டிய இடம் குறித்த முறையான திட்டமிடலுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்டுவார்கள் என அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஜுன் 1-ம் தேதி முதல் 100 ஜோடி ரயில்களை ரயில்வே இயக்குகிறது. இதில் துரந்தோ, சம்ப்ர்க் கிராந்தி, ஜன் சதாப்தி, பூர்வா எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்களும் அடங்கும். இந்த ரயில் போக்குவரத்து தொடங்கும் போது மக்களின் இயக்கம் மேலும் அதிகரிக்கும்
இதுவரை 2,317 ஷ்ராமிக் ரயில்கள் மூலம் 31 லட்சத்துக்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொடக்கத்தில் 24 லட்சம் மக்கள் மட்டுமே பயணிப்பார்கள் என கணக்கிடப்பட்ட நிலையில் 31 லட்சம் பேர் பயணித்துள்ளனர்
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago