வெளிமாநிலங்களில் இருந்து உ.பி. திரும்பியவர்களுக்கு வேலை: 58 ஆயிரம் பெண்களுக்கு வங்கி தோழி பணி

By ஆர்.ஷபிமுன்னா

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், வெளிமாநிலங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இதன் காரணமாக உத்தரபிரதேசம் திரும்பியவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டுகிறது.

இந்நிலையில், மீண்டும் அவர்கள் பிழைப்பு தேடி வெளிமாநிலங்களுக்கு செல்வதைத் தடுக்கும் வகையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பல்வேறு புதிய திட்டங்களை வகுத்து வருகிறார். இதற்காக 11 உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்துள்ளார்.

இந்த குழு தெரிவித்த யோசனையின்படி புதிதாக 31,238 மகளிர் சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி அவற்றுக்கு ரூ.218.49 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

இவை ஆயத்த ஆடை, கரோனா வைரஸ் தொற்று தடுப்பு அங்கி, முகக்கவசங்கள் தயாரிப்பில் ஈடுபட உள்ளன. சுயஉதவிக் குழுக்கள் ஊறுகாய், அப்பளம் உள்ளிட்ட உணவுப் பொருட்களை சர்வதேச தரத்தில் தயாரிக்க உதவுவதுடன் அவற்றை ஏற்றுமதி செய்யவும் மாநில அரசு துணைபுரிய உள்ளது. இந்த சுயஉதவிக் குழுக்கள் மூலமாக சுமார் 5 லட்சம் பெண்களுக்கு நேரடிப்பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதற்கான தொடக்க விழாவில் காணொலி காட்சி மூலம் முதல்வர் யோகி பேசும்போது, "வெளிமாநிலங்களில் இருந்து திரும்பிய தொழிலாளர்களின் திறமையை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இதன் பலனாக, உத்தரபிரதேசம் பல துறைகளிலும் மேம்பாடு கண்டு முன் உதாரணமான மாநிலமாக ஏற்றம் பெறும்" என்றார்.

இதனிடையே, கரோனா வைரஸ் பிரச்சினை நிலவும் இந்த சூழலில் பணம் எடுக்க வங்கிகளுக்கு செல்ல வேண்டியகட்டாயத்தில் உள்ள கிராமப்புறபெண்கள் நலனை கருத்தில்கொண்டு புதிய திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி, வங்கித்தோழி என்ற புதிய பணியில் 58 ஆயிரம் பெண்களை உபி அரசு அமர்த்துகிறது.

இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.4000 ஊதியம் அளிக்கப்படும். இத்துடன் பணி ரீதியாக அவர்கள் கையாளும் தொகைக்கு ஏற்பவங்கிகளும் குறிப்பிட்ட சதவீதம்கமிஷன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு ரூ.480 கோடி ஒதுக்கீடு செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்