புலந்த்ஷெஹர் அருகே சாலை விபத்தில் 2 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி- 13 பேர் படுகாயம் 

By செய்திப்பிரிவு

குஜராத்தில் உள்ள சூரத்திலிருந்து பிஜ்நோரில் உள்ள தங்கள் சொந்த கிராமத்துக்கு திரும்பிய போது விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் பலியாகினர்.

புலந்த்ஷெஹர் அருகே அஹ்மெட்கார் பகுதியில் புலம்பெயர் தொழிலாளர்கள் வந்த வாகனம் நேருக்கு நேர் வந்த பைக்கின் மீது மோதாமல் தவிர்க்க முயன்ற போது திரும்பி மின்கம்பத்தின் மீது மோதி கவிழ்ந்தது. வெள்ளிக்கிழமை காலை இந்த விபத்து நடந்தது.

இது தொடர்பாக புலந்த்ஷெஹர் உயர் போலீஸ் அதிகாரி ஹரேந்திர குமார் கூறும்போது, இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் மரணமடைந்தனர், 13 பேர் காயம் அடைந்துள்ளனர், என்றார்.

காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலியானவர்கள் நிஜாமுத்தின் மற்றும் இன்ட்டிசெர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்தின் போது சுமார் 24 புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

காலை 10.30 மணியளவில் விபத்து நடந்திருக்கும் போது போலீஸார் புலம்பெயர் தொழிலாளர்கள் சென்ற வாகனத்தை எப்படி அனுமதித்தனர் என்பது சர்ச்சையாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

மேலும்