உம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் வெள்ள பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி நாளை பார்வையிடுகிறார்.
வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் நேற்று பிற்பகலில் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. புயல் பிற்பகல் 2.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய நிலையில் கரையை கடந்து முடிக்க 4 மணிநேரத்திற்கும் அதிகமானது. மேற்குவங்கத்தின் கடல் பகுதி மட்டுமின்றி வங்கதேசத்தின் கடல் பகுதி வழியாகவும் உம்பன் புயல் கரையை கடந்தது.
மேற்குவங்கத்தில் புயல் கரையை கடந்த பகுதி சுந்தர வனக்காடுகள் அதிகம் கொண்ட இடமாகும். உம்பன் புயல் கரையை கடந்தபோது கொல்கத்தாவில் கடும் சூறாவளி காற்று வீசியது. மேற்குவங்க கடலோராத்தில் 5 மீ்ட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுப்பின.
» நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் சமுதாய வானொலியில் உரையாற்றுகிறார் பிரகாஷ் ஜவடேகர்
» கரோனா ஊரடங்கால் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி பாதிப்பு: ராஜ்நாத் சிங் பேச்சு
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புயல் கரையை கடந்தபகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இன்று விமானத்தில் சென்று பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரு மாநில முதல்வர்களுடன் பேசினார். வெள்ள பாதிப்பு குறித்து இன்று கருத்து தெரிவித்த பிரதமர் மோடி கூறுகையில் ‘‘மேற்குவங்கத்தில் உம்பன் புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை நாம் பார்த்தோம். இது நமக்கு சவாலான நேரம். ஒட்டுமொத்த நாடும் மேற்குவங்கத்திற்கு துணை நிற்கும். புயல் பாதிப்பில் இருந்து மேற்குவங்க மக்கள் மீண்டு வர பிராத்திப்போம். நிலைமை சீரடைவதை உறுதிப்படுத்துவோம்’’எனக் கூறியுள்ளார்.
இந்தநிலையில் உம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் வெள்ள பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி நாளை பார்வையிடுகிறார். விமானம் மூலம் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடும் பிரதமர் மோடி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் அவர் முதல்வர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் அவர் விவாதிக்கிறார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago