உம்பன் புயலால் கொல்கத்தா விமான நிலையம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான விமானங்கள் சேதமடைந்துள்ளன.
வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் நேற்று பிற்பகலில் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. புயல் பிற்பகல் 2.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய நிலையில் கரையை கடந்து முடிக்க 4 மணிநேரத்திற்கும் அதிகமானது. மேற்குவங்கத்தின் கடல் பகுதி மட்டுமின்றி வங்கதேசத்தின் கடல் பகுதி வழியாகவும் உம்பன் புயல் கரையை கடந்தது.
மேற்குவங்கத்தில் புயல் கரையை கடந்த பகுதி சுந்தர வனக்காடுகள் அதிகம் கொண்ட இடமாகும். உம்பன் புயல் கரையை கடந்தபோது கொல்கத்தாவில் கடும் சூறாவளி காற்று வீசியது. மேற்குவங்க கடலோராத்தில் 5 மீ்ட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுப்பின.
» காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக கர்நாடக மாநில போலீஸார் வழக்குப்பதிவு
» உம்பன் புயலால் ஏற்பட்ட சேதம்: மேற்குவங்கம், ஒடிசா மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். புயல் கரையை கடந்தபகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
உம்பன் புயலால் கொல்கத்தா விமான நிலையம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. கரோனா காரணமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான விமானங்கள் சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து ஏர் இந்தியா நிர்வாக இயக்குநர் ராஜீவ் பன்சால் கூறுகையில் ‘‘உம்பன் புயலால் கொல்கத்தா விமான நிலையம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. 2-வது வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்கள் சேதமடைந்துள்ளன. இதில் ஏர் இந்தியா விமானங்கள் எதுவும் சேதமடையவில்லை. அதேசமயம் தனியார் விமானங்கள் பல சேதமடைந்துள்ளன. சேத மதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறோம்’’ எனக் கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
52 mins ago
இந்தியா
47 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago