வங்கக்கடலில் உருவான உம்பன் சூப்பர் புயல் இன்று மேற்குவங்கம் மற்றும் வங்கதேச பகுதிகள் வழியாக கரையை கடந்தது. 5 மீட்டர் உயர்ந்த ராட்ச அலைகள் எழும்பியதுடன், கனமழை பெய்து வருவதால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள உம்பன் புயல் அதிதீவிரமடைந்து, சூப்பர் புயலாக மாறியது. வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் இன்று பிற்பகலில் காற்று வடக்கு- வடகிழக்கை நோக்கி நகர்ந்தது. இதன் வேகம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 22 கிலோ மீட்டர் என்றளவில் இருந்தது.
இது 19.8 டிகிரி அட்ச ரேகையிலும் 87.7 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருந்தது. இது ஏறக்குறைய பாராதீப் ( ஒடிஸா) அருகே 120 கிழக்கு – தென்கிழக்கில் இருந்தது. மேற்கு வங்க மாநிலம் திஹாவுக்கு தெற்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும், கேப்புபாரா ( வங்க தேசம்)வுக்கு 360 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
» மே 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு
» 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி: அமித் ஷா அறிவிப்பு
இது வங்களா விரிகுடாவுக்கு வடக்கு-வடகிழக்கு பகுதியை நோக்கி நகரந்து மேற்கு வங்க மற்றும் வங்க தேசத்தின் திஹா (மேற்கு வங்கம்) மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் ( வங்க தேசம்) இன்று மாலை கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பிற்பகல் முதல் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. புயல் பிற்பகல் 2.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய நிலையில் கரையை கடந்து முடிக்க 4 மணிநேரத்திற்கும் அதிகமானது. மேற்குவங்கத்தின் கடல் பகுதி மட்டுமின்றி வங்கதேசத்தின் கடல் பகுதி வழியாகவும் உம்பன் புயல் கரையை கடந்தது.
மேற்குவங்கத்தில் புயல் கரையை கடந்த பகுதி சுந்தர வனக்காடுகள் அதிகம் கொண்ட இடமாகும். உம்பன் புயல் கரையை கடந்தபோது கொல்கத்தாவில் கடும் சூறாவளி காற்று வீசியது. மேற்குவங்க கடலோராத்தில் 5 மீ்ட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுப்பின.
காற்றின் வேகம் மணிக்கு 155-165 கிலோ மீட்டராக உள்ளது. வேகம் படிப்படியாக அதிகரித்து மணிக்கு 185 கிலோ மீட்டராக உயர்ந்தது. ஹுக்ளி, கொல்கத்தா, ஹவுரா ஆகிய பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது.
புயல் கரையை கடந்தபகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. பல இடங்களில் மின்சாரம் இன்றி காணப்படுகின்றன. பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் இரவு முழுவதும் நிவாரண முகாம்களில் மக்கள் தங்கியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை உடனடியாக தொடங்கியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago